சினிமா செய்திகள்

நடிகர் லாரன்சின் மகிழ்ச்சி + "||" + The joy of actor Lawrence

நடிகர் லாரன்சின் மகிழ்ச்சி

நடிகர் லாரன்சின் மகிழ்ச்சி
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலினால் சாலையில் பாதுகாப்பு பணியில் இருந்து பெண் போலீசாருக்கு விலக்கு அளிக்கப்பட்டதற்கு நடிகர் ராகவா லாரன்ஸ் தனது டுவிட்டரில் மகிழ்ச்சி தெரிவித்து உள்ளார்.
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலினால் தமிழகத்தில் உள்ள பெண் காவலர்கள் இனி சாலை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட மாட்டார்கள் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இதற்கு பெண்கள் அமைப்புகள் பாராட்டு தெரிவித்து உள்ளன.

இந்த உத்தரவுக்கு மகிழ்ச்சி தெரிவித்து நடிகர் ராகவா லாரன்ஸ் டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், “சாலையில் பாதுகாப்பு பணியில் இருந்து பெண் போலீசாருக்கு விலக்கு அளிக்கப்பட்ட செய்தியை அறிந்தேன். பல முறை நான் என் தாயுடன் பயணம் செய்யும்போது இவ்வாறு பாதுகாப்பு பணியில் இருக்கும் பெண்கள் இயற்கை உபாதைக்காக, அவசரத் தேவைகளுக்காகவும் என்ன செய்வார்கள் என்பது பற்றி என் அம்மா என்னிடம் சொல்லி வருத்தப்பட்டு இருக்கிறார். நானும் வருந்தியிருக்கிறேன். அந்த வகையில் இந்த ஆணையை கண்டு மன நிம்மதி அடைகிறேன். முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி'' என்று கூறியுள்ளார்.