சினிமா செய்திகள்

என்னை வயது, நிறத்தை வைத்து விமர்சிப்பதா? பிரியாமணி வருத்தம் + "||" + Criticize me for age and color? Priyamani is upset

என்னை வயது, நிறத்தை வைத்து விமர்சிப்பதா? பிரியாமணி வருத்தம்

என்னை வயது, நிறத்தை வைத்து விமர்சிப்பதா? பிரியாமணி வருத்தம்
பருத்திவீரன் படத்தில் தேசிய விருது பெற்று முன்னணி நடிகையாக உயர்ந்த பிரியாமணி திருமணத்துக்கு பிறகும் தொடர்ந்து நடித்து வருகிறார். வெப் தொடர்களிலும் நடிக்கிறார். அவர் அளித்த பேட்டி வருமாறு:-
“சினிமா துறை போட்டி நிறைந்தது. நான் சினிமாவுக்கு வந்த புதிதில் கடினமாக உழைத்து மெதுவாக முன்னேறினேன். நேர்மையாக உழைத்தால் என்றாவது வெற்றி வரும். திருமணம் எனக்கு நடிக்க தடையாக இல்லை. கணவர் உதவியாக இருப்பதால் தொடர்ந்து நடிக்க முடிகிறது. திருமணத்துக்கு பிறகுதான் அதிக வாய்ப்புகள் வருகிறது. திருமணமான காஜல் அகர்வால், சமந்தா போன்றோர் கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். சீனியர் நடிகையான நயன்தாராவும் நல்ல கதைகளில் நடிக்கிறார். திருமணம் ஆனவர் ஆகாதவர் என்ற வித்தியாசம் சினிமாவில் இல்லை. திறமை இருந்தால் ஜெயிக்கலாம். எனக்கு வயதாகிவிட்டது என்றும் குண்டாக இருக்கிறேன். கருப்பாக இருக்கிறேன் என்றும் விமர்சிக்கின்றனர், அப்படி பேசுவது மனதுக்கு கஷ்டமாக உள்ளது. யாரையும் தரம் தாழ்த்தி பேசாதீர்கள். கருப்பும் அழகுதான்.''

இவ்வாறு பிரியாமணி கூறினார்.