சிம்பு-ஹன்சிகா நடித்த ‘மஹா’ திரைப்படத்திற்கு எதிரான மனு ஐகோர்ட்டில் தள்ளுபடி


சிம்பு-ஹன்சிகா நடித்த ‘மஹா’ திரைப்படத்திற்கு எதிரான மனு ஐகோர்ட்டில் தள்ளுபடி
x
தினத்தந்தி 15 Jun 2021 2:37 PM GMT (Updated: 2021-06-15T20:07:54+05:30)

சிம்பு, ஹன்சிகா நடித்துள்ள மஹா படத்தைத் திரையிட தடை கோரிய மனுவை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்துள்ளது.

சென்னை,

நடிகர் சிம்பு, நடிகை ஹன்சிகா நடிப்பில், ‘மஹா’ என்ற திரைப்படம் தயாராகியுள்ளது. உபைத் ஹர்மான் ஜமீல் இயக்கியுள்ள இந்த திரைப்படத்தை தயாரிப்பாளர் மதியழகன் தயாரித்துள்ளார். இந்த நிலையில் இந்த படத்தின் இயக்குனர் ஐகோர்ட்டில் வழக்கு ஒன்றை தாக்கல் செய்தார். 

அவரது மனுவில், தனது கதையை வைத்து தனக்கு தெரியாமல் படத்தை முடித்து ஒ.டி.டி. தளத்தில் வெளியிட தயாரிப்பு நிறுவனம் முயற்சிப்பதால், ‘மஹா’ படத்தை வெளியிடுவதற்கு தடை விதிக்க வேண்டும் என இயக்குனர் ஜமீல் தனது மனுவில் கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு இன்று விசாரணைக்கு வந்த போது, இந்த விவகாரம் தொடர்பாக இயக்குனர்கள் சங்கத்தில் நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதாக தயாரிப்பாளர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, படத்தை வெளியிட இடைக்கால விதிக்கக் கோரிய மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

Next Story