சினிமா செய்திகள்

கொரோனா நிவாரணம்: கவிஞர் வைரமுத்து வேண்டுகோள் + "||" + Corona relief: Poet Vairamuthu's request

கொரோனா நிவாரணம்: கவிஞர் வைரமுத்து வேண்டுகோள்

கொரோனா நிவாரணம்: கவிஞர் வைரமுத்து வேண்டுகோள்
கொரோனா பரவலை தடுக்க அரசு ஊரடங்கு பிறப்பித்து உள்ளது. தற்போது சில தளர்வுகளும் அளிக்கப்பட்டு உள்ளன.
ஊரடங்கினால் வருமானம் இன்றி கஷ்டப்படுவோருக்கு உதவ அரசு குடும்ப அட்டைகள் மூலம் ரூ.4 ஆயிரம் உதவிப்பணம் வழங்குகிறது. உணவுப் பொருட்களையும் வழங்கி வருகிறது. தொண்டு நிறுவனங்களும் உணவு பொருட்களை வழங்குகின்றன. இந்த நிலையில் கவிஞர் வைரமுத்துவும் உதவிகள் வழங்கி உள்ளார். அனைவரும் உதவி வழங்கும்படி வேண்டுகோளும் விடுத்துள்ளார். இதுகுறித்து வைரமுத்து டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், ‘’ஊரடங்கில் பூவும் வாழ்வும் வாடிப்போன பூக்காரிகள் சிலருக்குப் பொருள் கொஞ்சம் கொடுத்தேன். பண்புடையீர் உங்களைச் சூழ்ந்திருக்கும் சமூகத்தை ஆழ்ந்து பாருங்கள். அற்ற வயிறும் இற்ற உயிரும் எத்தனையோ? சற்றே உதவுங்கள். சிற்றுதவிக்கும் செழும்பயனுண்டு. சிற்றெறும்புக்கும் சிறுவயிறுண்டு'' என்று கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. 22 மொழிகளில் ‘கள்ளிக்காட்டு இதிகாசம்’ மொழிபெயர்ப்பு - கவிஞர் வைரமுத்து பெருமிதம்
கவிஞர் வைரமுத்து எழுதிய ‘கள்ளிக்காட்டு இதிகாசம்’ நாவல் இந்தியாவின் 22 மொழிகளிலும் மொழி பெயர்க்கப்படுகிறது.
2. கொரோனா நிவாரணம் கவிஞர் வைரமுத்து வேண்டுகோள்
கவிஞர் வைரமுத்து கொரோனா நிவாரணம் உதவிகள் வழங்கினார். பின்னர் தனது டுவிட்டர் பதிவில் அனைவரும் உதவி வழங்கும்படி வேண்டுகோளும் விடுத்துள்ளார்.
3. 2.70 கோடி குடும்பங்களுக்கு 2-ம் தவணையாக கொரோனா நிவாரணம்; ஜூன் 3-ந் தேதிக்குள் ரூ.2 ஆயிரம் வழங்கப்படும்: மு.க.ஸ்டாலின் பேட்டி
தமிழகத்தில் 2.70 கோடி குடும்பங்களுக்கு 2-ம் தவணை கொரோனா நிவாரண நிதியாக ஜூன் 3-ந் தேதிக்குள் ரூ.2 ஆயிரம் வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
4. கொரோனா நிவாரணம்; நடிகர் அக்‌ஷய்குமார் ரூ.1 கோடி உதவி
தமிழில் ரஜினிகாந்தின் 2.0 படத்தில் வில்லனாக நடித்த அக்‌ஷய்குமார் இந்தியில் முன்னணி நடிகராக இருக்கிறார்.