சினிமா செய்திகள்

டி.வி. நிகழ்ச்சிக்கு மாறிய தமன்னா + "||" + TV Tamanna who changed for the show

டி.வி. நிகழ்ச்சிக்கு மாறிய தமன்னா

டி.வி. நிகழ்ச்சிக்கு மாறிய தமன்னா
கொரோனா ஊரடங்கினால் திரையுலகம் பல மாதங்களாக முடங்கி உள்ள நிலையில் நடிகை தமன்னாவும் தொலைக்காட்சிக்கு வந்துள்ளார்.
தமிழ், தெலுங்கில் முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக தமன்னா இருக்கிறார். இந்தி படங்களிலும் நடித்துள்ளார். தற்போது கொரோனா ஊரடங்கினால் திரையுலகம் பல மாதங்களாக முடங்கி உள்ளது. சினிமா படப்பிடிப்புகள் நடக்கவில்லை.

இதனால் நடிகர் நடிகைகள் ஓ.டி.டி. தளங்களில் வெளியாகும் வெப் தொடர்களில் நடிக்க ஆர்வம் காட்டுகின்றனர். இன்னும் சிலர் பிக்பாஸ் நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார்கள். நடிகை தமன்னாவும் தொலைக்காட்சிக்கு வந்துள்ளார்.

தெலுங்கு டி.வி.யில் சமையல் நிகழ்ச்சியொன்றை தொகுத்து வழங்க அவரை ஒப்பந்தம் செய்துள்ளனர். இதற்காக அவருக்கு அதிக சம்பளம் பேசி இருப்பதாக கூறப்படுகிறது. தமன்னா நடித்த ஆக்‌ஷன் படம் 2019-ல் திரைக்கு வந்தது. அதன்பிறகு தமிழில் அவருக்கு படங்கள் இல்லை. தற்போது தெலுங்கில் சீட்டிமார், மாஸ்ட்ரோ, குர்துண்டா சீதாகாலம், எப்.சி, தட் ஈஸ் மகாலட்சுமி, இந்தியில் போல்சுடியன் ஆகிய படங்கள் கைவசம் உள்ளன. இவற்றில் சில படங்களின் படப்பிடிப்புகள் முடிந்து திரைக்கு வர தயாராக உள்ளன. மற்ற படங்களின் படப்பிடிப்புகள் கொரோனாவால் முடங்கி உள்ளன.