ராஷி கன்னாவின் கொரோனா பயம்


ராஷி கன்னாவின் கொரோனா பயம்
x
தினத்தந்தி 16 Jun 2021 12:18 AM GMT (Updated: 2021-06-16T05:48:13+05:30)

படப்பிடிப்பில் எனக்கு கொரோனா பயம் இருந்தது என ராஷி கன்னா அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

தமிழில் இமைக்கா நொடிகள், அடங்க மறு, சங்கத்தமிழன் ஆகிய படங்களில் நடித்துள்ள ராஷிகன்னா கைவசம் தற்போது அரண்மனை 3-ம் பாகம், துக்ளக் தர்பார், சர்தார் உள்ளிட்ட படங்கள் உள்ளன.

ராஷிகன்னா அளித்துள்ள பேட்டியில், “உலகம் முழுவதும் மக்கள் அனைவரும் கொரோனாவுக்கு பயந்து வீட்டில் உட்கார்ந்து இருக்கிறார்கள். எவ்வளவு நாள்தான் இப்படி இருக்க முடியும். போராடித்தான் ஆக வேண்டும் என்ற நிலைமை உள்ளது. அதனால் ஐரோப்பிய நாடுகளில் கொரோனா கொஞ்சம் குறைந்துள்ள நிலையில் வேறு வழியில்லாமல் நான் நடிக்கும் தேங்க் யூ என்ற தெலுங்கு படத்தின் படப்பிடிப்பை முடித்து விட்டு திரும்பி வந்துள்ளேன்.

படப்பிடிப்பில் எனக்கு கொரோனா பயம் இருந்தது. படப்பிடிப்பு அரங்கில் கொரோனா பரிசோதனை செய்து கொள்வார்கள். முடிந்த அளவு 30 பேருக்கு உள்ளேயே வைத்து படப்பிடிப்பை நடத்தினோம். ஒரு பகுதியில் இருந்து இன்னொரு இடத்துக்கு போக வாகனங்களிலும் சமூக இடைவெளியை கடைபிடித்தோம். ஜாக்கிரதையாக படப்பிடிப்பில் பங்கேற்றோம். இது மறக்க முடியாத அனுபவம். கஷ்டத்தில் எதிர்நீச்சல் போடுவது மாதிரி இருந்தது'' என்றார்.


Next Story