கொரோனா நிவாரணம் கவிஞர் வைரமுத்து வேண்டுகோள்


கொரோனா நிவாரணம் கவிஞர் வைரமுத்து வேண்டுகோள்
x
தினத்தந்தி 16 Jun 2021 1:31 AM GMT (Updated: 16 Jun 2021 1:31 AM GMT)

கவிஞர் வைரமுத்து கொரோனா நிவாரணம் உதவிகள் வழங்கினார். பின்னர் தனது டுவிட்டர் பதிவில் அனைவரும் உதவி வழங்கும்படி வேண்டுகோளும் விடுத்துள்ளார்.

கொரோனா பரவலை தடுக்க அரசு ஊரடங்கு பிறப்பித்து உள்ளது. தற்போது சில தளர்வுகளும் அளிக்கப்பட்டு உள்ளன. ஊரடங்கினால் வருமானம் இன்றி கஷ்டப்படுவோருக்கு உதவ அரசு குடும்ப அட்டைகள் மூலம் ரூ.4 ஆயிரம் உதவிப்பணம் வழங்குகிறது. உணவுப் பொருட்களையும் வழங்கி வருகிறது. தொண்டு நிறுவனங்களும் உணவு பொருட்களை வழங்குகின்றன.

இந்த நிலையில் கவிஞர் வைரமுத்துவும் உதவிகள் வழங்கி உள்ளார். அனைவரும் உதவி வழங்கும்படி வேண்டுகோளும் விடுத்துள்ளார். இதுகுறித்து வைரமுத்து டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், ‘’ஊரடங்கில் பூவும் வாழ்வும் வாடிப்போன பூக்காரிகள் சிலருக்குப் பொருள் கொஞ்சம் கொடுத்தேன். பண்புடையீர் உங்களைச் சூழ்ந்திருக்கும் சமூகத்தை ஆழ்ந்து பாருங்கள். அற்ற வயிறும் இற்ற உயிரும் எத்தனையோ? சற்றே உதவுங்கள். சிற்றுதவிக்கும் செழும்பயனுண்டு. சிற்றெறும்புக்கும் சிறுவயிறுண்டு'' என்று கூறியுள்ளார்.

Next Story