சினிமா செய்திகள்

நடிகை மீரா மிதுன் தற்கொலை மிரட்டல் + "||" + Actress Meera Mithun Suicide threat

நடிகை மீரா மிதுன் தற்கொலை மிரட்டல்

நடிகை மீரா மிதுன் தற்கொலை மிரட்டல்
மீராமிதுன் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமானார். தற்கொலை செய்து கொள்ளப்போவதாக அறிவித்து பரபரப்பு ஏற்படுத்தி உள்ளார்.
தமிழில் 8 தோட்டாக்கள், தானா சேர்ந்த கூட்டம், போதை ஏறி புத்தி மாறி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள மீராமிதுன் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமானார். இவர் தற்கொலை செய்து கொள்ளப்போவதாக அறிவித்து பரபரப்பு ஏற்படுத்தி உள்ளார்.

இதுகுறித்து மீராமிதுன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘நான் ஒரு அமைப்புக்காக வேலை பார்த்து பிரபலப்படுத்தினேன். 3 ஆண்டுகளுக்கு முன்பு அந்த அமைப்பில் இருந்து விலகினேன். அதை நடத்தியவர் செய்த அநீதியால் அமைப்பில் இருந்து விலகினேன்.

அவர் எனது பெயரை கெடுத்தார். போலி வழக்குகள் தொடர்ந்தார். அதிகாரத்தை வைத்து தொல்லைகள் கொடுத்தார். அதில் இருந்து மீண்டேன். ஆனாலும் தினமும் என்னை பின் தொடர்கிறார். தொல்லைகள் கொடுக்கிறார். எனது பணிகளை தடுக்கிறார்.

3 வருடங்களாக தொல்லையை அனுபவிக்கிறேன். இவரால் மன அமைதி போய் விட்டது. எனவே தற்கொலைதான் எனக்கு இருக்கும் ஒரே முடிவு. எனது தற்கொலைக்கு அவர்தான் முழு காரணம். சுஷாந்த் சிங் போன்று நான் இறந்த பிறகு அவரை தண்டிக்க வேண்டும்'' என்று கூறியுள்ளார். இது பரபரப்பாகி உள்ளது.