அஜித்தின் புதிய படம்


அஜித்தின் புதிய படம்
x
தினத்தந்தி 16 Jun 2021 10:08 PM GMT (Updated: 2021-06-17T03:38:33+05:30)

அஜித்குமார் நேர்கொண்ட பார்வை படத்துக்கு பிறகு வலிமை படத்தில் நடித்து வருகிறார்.

இதில் நாயகியாக கியூமா குரோஷி நடிக்கிறார். எச்.வினோத் இயக்குகிறார். போனிகபூர் தயாரிக்கிறார். பெரும்பகுதி படப்பிடிப்பு முடிந்துள்ளது.

இறுதிகட்ட படப்பிடிப்பை சுவிட்சர்லாந்தில் நடத்த திட்டமிட்ட நிலையில் கொரோனாவால் முடங்கி உள்ளது. வெளிநாடு செல்வதற்கு பதிலாக மீதி காட்சிகளை மும்பை, டெல்லியில் படமாக்கலாமா என்று படக்குழுவினர் யோசிக்கின்றனர். படத்தை தீபாவளிக்குத் திரைக்கு கொண்டு வர திட்டமிட்டு உள்ளனர்.

இந்த நிலையில் வலிமை படத்துக்கு பிறகு அஜித்குமார் நடிக்கும் 61-வது படத்தையும் வினோத்தே இயக்க உள்ளதாக ஏற்கனவே தகவல் கசிந்தது. நேர்கொண்ட பார்வை படமும் இவர்கள் கூட்டணியில்தான் வந்தது.

தற்போது மூன்றாவது முறையாக இணைய இருப்பதாகவும், இந்த படத்தையும் போனிகபூரே தயாரிக்க உள்ளதாகவும் கூறப்பட்டது. புதிய படத்தின் முழு படப்பிடிப்பையும் குறுகிய காலத்தில் அதாவது 2 மாதங்களில் நடத்தி முடிக்க திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது


Next Story