சினிமா செய்திகள்

வைரலாகும் பெயர் விஜய்யின் 65-வது படம் பெயர் ‘டார்கெட்'? + "||" + Name that goes viral 65th film of Vijay Name Target

வைரலாகும் பெயர் விஜய்யின் 65-வது படம் பெயர் ‘டார்கெட்'?

வைரலாகும் பெயர் விஜய்யின் 65-வது படம் பெயர் ‘டார்கெட்'?
விஜய்க்கு 65-வது படம். ஜோடியாக பூஜா ஹெக்டே வருகிறார். இதன் முதல் கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியாவில் முடிந்துள்ளது.
விஜய் மாஸ்டர் படத்துக்கு பிறகு ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் படத்தில் நடிக்க சம்மதித்து அதற்கான பணிகள் நடந்த நிலையில் பட நிறுவனத்துடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு முருகதாஸ் விலகினார். இதனால் அவருக்கு பதிலாக கோலமாவு கோகிலா, டாக்டர் படங்களை இயக்கிய நெல்சன் திலீப்குமார் இயக்கும் படத்தில் நடிப்பது உறுதியானது.

இது விஜய்க்கு 65-வது படம். ஜோடியாக பூஜா ஹெக்டே வருகிறார். இதன் முதல் கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியாவில் முடிந்துள்ளது. கொரோனா 2-வது அலை குறைந்த பின் சென்னையில் அடுத்தகட்ட படப்பிடிப்பை தொடங்க திட்டமிட்டு உள்ளனர்.

இந்த படத்துக்கு இன்னும் பெயர் வைக்கவில்லை. இந்த நிலையில் விஜய்யின் 65-வது படத்துக்கு டார்கெட் என்ற தலைப்பை வைத்துள்ள போஸ்டர் சமூக வலைத்தளத்தில் வெளியாகி உள்ளது. இந்த தலைப்பை உண்மை என்று நம்பி பலரும் வைரலாக்கி வருகிறார்கள்.

ஆனால் படக்குழுவினர் டார்கெட் தலைப்பு உண்மைதானா என்பதை உறுதிப்படுத்தவில்லை. விஜய்யின் பிறந்த நாளையொட்டி வருகிற 22-ந் தேதி படத்தின் பெயர் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படலாம் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.