சினிமா செய்திகள்

சினிமா படபிடிப்புக்காக காதலர் விக்னேஷ் சிவனுடன் தனி விமானத்தில் கொச்சின் சென்ற நயன்தாரா + "||" + For cinema shooting With lover Vignesh Sivan Nayanthara who went to Cochin on a private plane

சினிமா படபிடிப்புக்காக காதலர் விக்னேஷ் சிவனுடன் தனி விமானத்தில் கொச்சின் சென்ற நயன்தாரா

சினிமா படபிடிப்புக்காக  காதலர் விக்னேஷ் சிவனுடன் தனி விமானத்தில் கொச்சின் சென்ற நயன்தாரா
'பாட்டு' சினிமா படபிடிப்புக்காக தனி விமானத்தில் காதலர் விக்னேஷ் சிவனுடன் கொச்சின் சென்றுள்ளார் நடிகை நயன்தாரா.சென்னை

தொடர்ச்சியாக தமிழ் படங்களில் மட்டுமே கவனம் செலுத்தி வந்த நடிகை நயன்தாரா, சமீபமாக மலையாள படங்களிலும் ஆண்டுக்கு ஒன்று என்று நடித்து வருகிறார். கடந்த 2019 ஆம் ஆண்டு ’லவ் ஆக்‌ஷன் டிராமா’ படத்தில் நடித்தவர், அடுத்ததாக சமீபத்தில் வெளியான ‘நிழல்’ படத்தில் நடித்திருந்தார்.  

இப்படம் வெளியாவதற்கு முன்னரே ’நேரம்’, ’பிரேமம்’ பட புகழ் இயக்குநர் அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் பகத் பாசிலுக்கு ஜோடியாக ’பாட்டு’ படத்தில் நடிப்பதாக கடந்த ஆண்டு இறுதியில் அதிகாரபூர்வ அறிவிப்புகள் வெளியாகின.

இந்நிலையில், இப்படத்தின்  படபிடிப்புக்காக விக்னேஷ் சிவனுடன் தனி விமானத்தில் நயன்தாரா கொச்சின் சென்றடைந்துள்ளார். விக்னேஷ் சிவன் விமானத்தில் பயணம் செய்யும் வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருந்த நிலையில், கொச்சினை சென்றடைந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகின்றன.

இதேபோல், கடந்த ஏப்ரல் 14 ஆம் தேதி மலையாள புத்தாண்டை கொண்டாடவும் தனி விமானத்தில் விக்னேஷ் சிவனுடன் சென்றிருந்தார் நயன்தாரா என்பது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

1. பழம்பெரும் நடிகை ஜெயந்தி உடல் நல குறைவால் காலமானார்
ஜெயந்தி சினிமாவில் நடித்த அந்த காலத்திலேயே மிகவும் தைரியமான ரோல்களில் நடித்தார்.
2. "பிரபாஸ் 21" படத்தில் இணைந்த அமிதாப்பச்சன் - பூஜையுடன் தொடங்கிய படப்பிடிப்பு
ஐதராபாத்தில் உள்ள ராமோஜி பிலிம் சிட்டியில் முதல் கட்ட படப்பிடிப்பில் அமிதாப் பச்சனின் காட்சிகள் படமாக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
3. கிழக்கு கடற்கரை பண்ணை வீட்டில் மது விருந்து ; சினிமா நடிகை உள்பட 15 பேர் கைது
சென்னை கிழக்கு கடற்கரை சாலை பண்ணை வீட்டில் சொகுசு விருந்து நடத்தி வந்த சினிமா துணை நடிகை மற்றும் 15 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து உள்ளனர்.
4. கிழக்கு கடற்கரை பண்ணை வீட்டில் சொகுசு விருந்து ; சினிமா நடிகை உள்பட 15 பேர் கைது
சென்னை கிழக்கு கடற்கரை சாலை பண்ணை வீட்டில் சொகுசு விருந்து நடத்தி வந்த சினிமா துணை நடிகை மற்றும் 15 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து உள்ளனர்.
5. இன்ஸ்டாகிராமில் பின் தொடர்பவர்கள்: காஜல் அகர்வாலை முந்திய ராஷ்மிகா மந்தனா
ராஷ்மிகா மந்தனா தற்போது மும்பையில் வசித்து வருகிறார், மிஷன் மஜ்னு படப்பிடிப்பில் ஈடுபட்டுள்ளார்.இதில் சித்தார்த் மல்ஹோத்ரா ஜோடியாக நடிக்கிறார்