இந்தியாவில் உள்ள பாகிஸ்தான் நடிகை இம்ரான் கானின் உதவி கேட்டு கடிதம்


படம்:  Meeras Instagram
x
படம்: Meera's Instagram
தினத்தந்தி 18 Jun 2021 12:33 PM GMT (Updated: 2021-06-18T18:03:17+05:30)

இந்தியாவில் உள்ள பாகிஸ்தான் நடிகை பிரதமர் இம்ரான் கானின் உதவி கேட்டு கடிதம் எழுதி உள்ளார். நில அபகரிப்பாளர் தனது தாயைக் கடத்திச் சென்றுள்ளதாக குற்றம்சாட்டி உள்ளார்.

மும்பை

பாகிஸ்தானை சேர்ந்த பாலிவுட் நடிகை மீரா. 2005 ஆம் ஆண்டில் அஷ்மித் படேலுக்கு ஜோடியாக சோனி ரஸ்தானின் ‘நாஜர்’ படத்தில்  நடிகை மீரா நடித்துள்ளார். மீரா பல பாலிவுட் படங்களிலும் பணியாற்றியுள்ளார். தற்போது அவர்  பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு ஒரு  கடிதம் எழுதி உள்ளார்.

மீரா தனது குத்தகைதாரர் மியான் ஷாஹித் மஹ்மூத் தனது தாயார் ஷப்கத் ஸஹ்ரா புகாரியை கடத்திச் சென்று தனது குடும்பச் சொத்தை சட்டவிரோதமாக அபகரிக்க முயலுவதாக  குற்றம் சாட்டியுள்ளார்.  தனது தாயாரை கண்டுபிடிக்க விரைவாகக் தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நடிகை இம்ரான் கானிடம் கோரிக்கை வைத்துள்ளார்.

 மீரா மேலும் சொத்து பிரச்சினை தொடர்பாக லாகூர்  கேபிடல் சிட்டி போலீஸ் நிலையத்திற்கு  ஒரு புகாரை அனுப்பி உள்ளார். 

இது குறித்து கண்ணீர் மல்க நிருபர்களிடம் பேசிய மீரா மியான் ஷாஹித் மஹ்மூத்தால் நான் அச்சுறுத்தப்படுகிறேன், அவர் ஒரு நில அபகரிப்பாளர், அவர் எனது குடும்ப சொத்துக்களை சட்டவிரோதமாக கையகப்படுத்த முயற்சிக்கிறார்  என் அம்மாவையும் சகோதரரையும் தாக்கினர்.இந்த நபர் என் தாயைக் கடத்திச் சென்றுள்ளார்.இந்த பிரச்சினையை தீர்க்க உதவுமாறு  பாகிஸ்தான் பிரதமரிடம் வேண்டுகோள் விடுக்கின்றேன் என கூறினார்.

Next Story