பாலியல் தொல்லை: பட அதிபர் மீது நடிகை புகார்


பாலியல் தொல்லை: பட அதிபர் மீது நடிகை புகார்
x
தினத்தந்தி 18 Jun 2021 8:52 PM GMT (Updated: 2021-06-19T02:22:59+05:30)

சினிமாவுக்கு வந்த புதிதில் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்த தயாரிப்பாளர் பற்றிய தகவலை வெளியிட்டுள்ளார்.

பிரபல இந்தி நடிகை நீனா குப்தா தனது வாழ்க்கையை புத்தகமாக எழுதி உள்ளார். அதில் சினிமாவுக்கு வந்த புதிதில் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்த தயாரிப்பாளர் பற்றிய தகவலை வெளியிட்டுள்ளார். அவர் கூறும்போது, “ஒரு நாள் எனது தோழி தென்னிந்திய தயாரிப்பாளர் ஒருவரை சந்திக்கும்படி என்னிடம் கூறினாள். அவர் பெரிய புள்ளி என்றும் தெரிவித்தாள். நான் அந்த தயாரிப்பாளரை சந்திக்க ஓட்டலுக்கு சென்றேன். ஓட்டல் லாபியில் நின்று போன் செய்தேன்.

அந்த தயாரிப்பாளர் உன்னைத்தான் எதிர்பார்த்துக்கொண்டு இருக்கிறேன். எனது அறைக்கு வா என்று அழைத்தார். அவரிடம் போய் எனக்கு படத்தில் என்ன கதாபாத்திரம் சார் என்றேன். அவர் தென்னிந்தியாவில் பல கதாநாயகிகளை அறிமுகப்படுத்தியதாக சொன்னார். எனக்கு கதாநாயகியின் தோழி கதாபாத்திரம் என்று விளக்கினார். அது சிறிய கதாபாத்திரமாக தெரிந்தது. பின்னர் அந்த தயாரிப்பாளரிடம் நான் கிளம்பலாமா என்று கேட்டேன். உடனே அவர் போகிறாயா? எங்கே? இன்றைய இரவை என்னோடு நீ கழிக்கவில்லையா என்று கேட்டு தகாத முறையில் நடந்தார். நான் அதிர்ச்சியாகி அங்கிருந்து வெளியேறி விட்டேன்’’ என்று தெரிவித்துள்ளார்.

Next Story