‘தி பேமிலிமேன் 3' சர்ச்சை தொடரில் விஜய்சேதுபதி?


‘தி பேமிலிமேன் 3 சர்ச்சை தொடரில் விஜய்சேதுபதி?
x
தினத்தந்தி 18 Jun 2021 9:18 PM GMT (Updated: 2021-06-19T02:48:31+05:30)

தி பேமிலி மேன் 2 வெப் தொடர் சமீபத்தில் ஓ.டி.டி. தளத்தில் வெளியாகி எதிர்ப்புக்கு உள்ளானது.

இந்த தொடரில் விடுதலைப்புலிகள் போராட்டத்தை அவதூறு செய்து இருப்பதாக கண்டனங்கள் எழுந்தன. தொடருக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் வற்புறுத்தப்பட்டது. இதில் போராளியாக வந்த சமந்தாவின் கதாபாத்திரமும் சர்ச்சையானது. மனோஜ்பாய், பிரியாமணி, மைம்கோபி, அழகம் பெருமாள் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் வந்தனர். ராஜ் மற்றும் டீகே இயக்கினர்.

அடுத்து தி பேமிலிமேன் தொடரின் 3-ம் பாகம் தயாராக உள்ளது. இதில் விஜய்சேதுபதியை முக்கிய கதாபத்திரத்தில் நடிக்க வைக்க முயற்சிகள் நடப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. தி பேமிலிமேன் 2-வது சீசனிலேயே போராளி குழு தலைவர் கதாபாத்திரத்தில் நடிக்க விஜய் சேதுபதியை அணுகியதாகவும், ஆனால் அவர் மறுத்ததால் மைம் கோபியை தேர்வு செய்ததாகவும் கூறப்படுகிறது.

தமிழ் நடிகர்கள் நடித்த பேமிலிமேன் 2 தொடர் பிரபலமானதால் 3-ம் பாகத்தில் விஜய்சேதுபதியை நடிக்க வைக்க அந்த தொடரின் குழுவினர் ஆர்வமாக இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் விஜய்சேதுபதி நடிப்பாரா? என்பது உறுதியாகவில்லை.

Next Story