சினிமா செய்திகள்

3 மொழி படத்தில் நடிக்கும் தனுஷ் + "||" + Starring in 3 language film Dhanush

3 மொழி படத்தில் நடிக்கும் தனுஷ்

3 மொழி படத்தில் நடிக்கும் தனுஷ்
தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய 3 மொழிகளில் தயாராகும் புதிய படத்தில் நடிக்க தனுஷ் ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளார்.
இந்த படத்தை பிரபல தெலுங்கு டைரக்டர் சேகர் கம்முலா இயக்குகிறார். இவர் சிறந்த இயக்குனருக்கான தேசிய விருது பெற்றவர். டாலர் ட்ரீம்ஸ், பிடா, லீடர் உள்ளிட்ட படங்களை இயக்கி உள்ளார். தனுஷ் படத்தை அதிக பொருட்செலவில் இயக்க உள்ளார். இதர நடிகர், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு நடக்கிறது. தனுஷ் இந்தியில் ஏற்கனவே அந்த்ராங்கி ரே படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படம் விரைவில் திரைக்கு வர உள்ளது. கார்த்திக் நரேன் இயக்கும் படத்திலும் நடிக்க உள்ளார். தற்போது அவெஞ்சர்ஸ் படங்களை டைரக்டு செய்த ருஸ்ஸோ சகோதரர்கள் இயக்கும் த கிரேமேன் ஹாலிவுட் படத்தில் நடிக்க அமெரிக்காவில் முகாமிட்டு உள்ளார். ஒரு கொலை கும்பலின் தலைவன் கதாபாத்திரத்தில் அவர் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்தை முடித்துவிட்டு சேகர் கம்முலு படத்தில் நடிப்பார் என்று தெரிகிறது.