கமல்ஹாசன் பகிர்ந்த 10 வேட அனுபவம்


கமல்ஹாசன் பகிர்ந்த 10 வேட அனுபவம்
x
தினத்தந்தி 18 Jun 2021 9:34 PM GMT (Updated: 2021-06-19T03:04:38+05:30)

தசாவதாரம் படம் வெளியாகி 13 ஆண்டுகள் ஆவதை தொடர்ந்து கமல்ஹாசன் அதில் நடித்த 10 தோற்றங்களையும் சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார்.

கமல்ஹாசன் மைக்கேல் மதன காமராஜன் படத்தில் 4 வேடத்திலும் தசாவதாரம் படத்தில் 10 வேடங்களிலும் நடித்து இருந்தார். இந்த படங்களில் கமலின் வித்தியாசமான கதாபாத்திரங்களும் தொழில் நுட்பங்களும் ரசிகர்களை பெரிதும் கவர்ந்தன.

தசாவதாரம் படம் வெளியாகி 13 ஆண்டுகள் ஆவதை தொடர்ந்து கமல்ஹாசன் அதில் நடித்த 10 தோற்றங்களையும் சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார். மலையாளத்தில் சாய்பல்லவி நடித்து பெரிய வெற்றி பெற்ற பிரேமம் படத்தை இயக்கி பிரபலமான அல்போன்ஸ் புத்திரன் அந்த தோற்றங்களை பார்த்து வியந்து ‘மைக்கேல் மதன காமராஜன், தசாவதாரம் படத்தின் காட்சிகளை எப்படி படமாக்கினீர்கள் என்று எனக்கு சொல்லித்தர முடியுமா? படம் இயக்குவதில் தசாவதாரம் படம் பி.எச்.டி போன்றது. மைக்கேல் மதன காமராஜன் டிகிரி படிப்பை போன்றது'' என்று பதிவிட்டு இருந்தார்.

இதற்கு பதில் அளித்து கமல்ஹாசன் வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “நன்றி அல்போன்ஸ் புத்திரன். விரைவில் அதை நிறைவேற்றுகிறேன். அந்த படங்களில் எவ்வளவு கற்றேன் என்பதை உங்களுக்கு எப்படி விளக்குவது என்று தெரியவில்லை. படங்கள் வெளியாகி பல வருடங்களுக்கு பிறகு அதை நான் விளக்குவது எனக்கு புதிய படிப்பினையை கற்றுக்கொடுக்கும்.’’ என்று கூறியுள்ளார்.

Next Story