சினிமா செய்திகள்

அமெரிக்கா புறப்பட்டுச் சென்றார் ரஜினிகாந்த் + "||" + Rajinikanth leaves for US

அமெரிக்கா புறப்பட்டுச் சென்றார் ரஜினிகாந்த்

அமெரிக்கா புறப்பட்டுச் சென்றார் ரஜினிகாந்த்
மருத்துவ சிகிச்சைக்காக நடிகர் ரஜினிகந்த் இன்று காலை தனி விமானத்தில் அமெரிக்கா புறப்பட்டுச்சென்றார்.
சென்னை,

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் தற்போது ‘அண்ணாத்த’ திரைப்படம் உருவாகி உள்ளது. சிவா இயக்கியுள்ள இப்படத்தில் ரஜினியுடன் நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், மீனா, குஷ்பு, சூரி, பிரகாஷ் ராஜ் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. இப்படத்தில் ரஜினி சம்பந்தப்பட்ட காட்சிகள் எடுத்து முடிக்கப்பட்டுவிட்டன. விரைவில் ரஜினி டப்பிங் பணிகளையும் முடித்துவிடுவார் என கூறப்படுகிறது. ‘அண்ணாத்த’ படம் வருகிற தீபாவளி பண்டிகையன்று வெளியிடப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

ரஜினிகாந்துக்கு  உடல்நிலை சரியில்லாதபோது, அமெரிக்காவில் சிகிச்சை எடுத்துக்கொண்டு முழுமையாக குணமானார். அதற்குப் பின்பே மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்தத் தொடங்கினார். தொடர்ச்சியாகப் படங்கள் நடித்து வந்தாலும், அவ்வப்போது அமெரிக்காவுக்கு சிகிச்சைக்காகச் சென்று வருவார்.

தற்போது கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, வெளிநாட்டுக்கு சிகிச்சைக்குச் செல்லாமல் இருந்தார்.  தற்போது அமெரிக்காவில் பாதிப்பு குறைந்ததால் அவர் உடல் பரிசோதனை செய்துகொள்ள அமெரிக்கா செல்லத் திட்டமிட்டார்.

கொரோனா காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகள் அமலில் இருப்பதால், தனி விமானத்தில் செல்ல மத்திய அரசிடம் ரஜினிகாந்த் அனுமதி கோரியிருந்தார். இதற்கு மத்திய அரசும் அனுமதி அளித்தது. இதையடுத்து, இன்று  அதிகாலை ரஜினிகாந்த் தனி விமானத்தில் புறப்பட்டுச்சென்றார். கத்தார் வரை தனி விமானத்தில் செல்லும் ரஜினிகாந்த், அங்கிருந்து பயணிகள் விமானத்தில் அமெரிக்காவுக்கு செல்ல இருப்பதாக கூறப்படுகிறது. 

ஹாலிவுட் படப்பிடிப்பு காரணமாக நடிகர் தனுஷும் அவரது மனைவி ஐஸ்வர்யா தனுஷும் அமெரிக்காவில் இருக்கின்றனர். அவர்கள் ரஜினியுடன் இருந்து அவரை பார்த்துக் கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  சுமார் ஒரு மாத ஓய்வுக்குப் பின் ரஜினிகாந்த், ஜூலை 8-ஆம் தேதி நாடு திரும்புவார் என்று கூறப்படுகிறது. 


தொடர்புடைய செய்திகள்

1. அண்ணாத்த படத்துக்கு ‘டப்பிங்' பேசிய ரஜினி
ரஜினிகாந்த் அண்ணாத்த படத்தில் நடித்து முடித்துள்ளார். ஏற்கனவே ஐதராபாத்தில் நடந்த இதன் படப்பிடிப்புகளில் அதிக நாட்கள் பங்கேற்று நடித்தார். பின்னர் அமெரிக்கா சென்று மருத்துவ பரிசோதனை செய்து சென்னை திரும்பி மீண்டும் விடுபட்ட காட்சிகளுக்காக இரண்டு நாட்கள் நடித்து கொடுத்தார்.
2. மக்கள் மன்ற மாவட்ட செயலாளர்களை ஜூலை 12ஆம் தேதி சந்திக்கிறார் நடிகர் ரஜினிகாந்த்
நடிகர் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளை வரும் ஜூலை 12 ஆம் தேதி ராகவேந்திரா திருமண மண்டபத்தில் சந்தித்து ஆலோசனை மேற்கொள்ள உள்ளார்.
3. அமெரிக்காவில் மருத்துவ பரிசோதனை முடிந்து சென்னை திரும்பினார் நடிகர் ரஜினிகாந்த்
அமெரிக்காவில் மருத்துவ பரிசோதனையை முடித்த நடிகர் ரஜினிகாந்த் இன்று அதிகாலை சென்னை திரும்பினார்.
4. அமெரிக்காவில் ரஜினிகாந்த் - ஐஸ்வர்யா தனுஷ்...! வைரலாகும் புகைப்படம்
அமெரிக்க ஆஸ்பத்திரியில் ரஜினிகாந்த் மருத்துவ பரிசோதனைகள் செய்து கொண்டார்.
5. சிறப்பு அனுமதியுடன் தனி விமானத்தில் சிகிச்சை,ஓய்வுக்காக அமெரிக்கா செல்லும் ரஜினிகாந்த்
சிறப்பு அனுமதியுடன் தனி விமானத்தில் ரஜினிகாந்த் சிகிச்சை மற்றும் ஓய்வுக்காக அமெரிக்கா செல்லவுள்ளார்.