சினிமா செய்திகள்

அடர்ந்த காட்டுக்குள் சஸ்பென்ஸ்-திகிலுடன் ‘மெமரீஸ்’ + "||" + ‘Memories’ with suspense-horror in the dense jungle

அடர்ந்த காட்டுக்குள் சஸ்பென்ஸ்-திகிலுடன் ‘மெமரீஸ்’

அடர்ந்த காட்டுக்குள் சஸ்பென்ஸ்-திகிலுடன் ‘மெமரீஸ்’
சஸ்பென்ஸ்-திகிலுடன் கூடிய ‘மெமரீஸ்’ என்ற படம், அடர்ந்த காட்டுக்குள் படமாகி இருக்கிறது.
அதில் கதாநாயகனாக வெற்றி நடித்து இருக்கிறார். இவர், ‘8 தோட்டாக்கள், ’ ‘ஜீவி’ ஆகிய படங்களில் நடித்தவர். சாம் பிரவீன் இயக்கியிருக்கிறார். ‘மெமரீஸ்’ படத்தை பற்றி இவர் கூறும்போது...

‘‘இது ஒரு சஸ்பென்ஸ் திகில் படம். காதலும் இருக்கிறது. மேலும் இது ஒரு புதிய முயற்சி. பெரும் பகுதி காட்சிகளை அடர்ந்த காட்டுக்குள் படமாக்கி இருக்கிறோம்’’ என்றார்.

சிஜூ தமீன்ஸ் தயாரித்து இருக்கிறார். படத்தின் டீசரை டைரக்டர் பாண்டிராஜ், இசையமைப்பாளர் டி.இமான், நடிகர் ரகுமான் ஆகியோர் வெளியிட்டனர். டீசர் வெளியான சில நிமிடங்களில் பெரும் வரவேற்பை பெற்றது என்று டைரக்டர் சாம் பிரவீன் கூறினார்.

படத்தின் கதையை பற்றி இவர் கூறியதாவது:-

‘‘ஒரு வனப்பகுதி. அங்கு ஒரு பாழடைந்த கட்டிடம். அந்த இடத்தில் கதாநாயகன் கண் விழிக்கிறார். நினைவாற்றலை இழந்த அவருக்கு மருத்துவ உதவி கிடைக்கிறது. டாக்டரிடம் அவர், ‘‘நான் யார்?’’ என்று கேட்கிறார். ‘‘முதலில் உன்னை யார் என்று நீயே கண்டுபிடி’’ என்கிறார், டாக்டர்.

தான் யார் என்று கண்டுபிடிக்க கதாநாயகன் மீண்டும் வனப்பகுதிக்குச் செல்கிறார்.

அவர் யார்? என்பதை கண்டுபிடித்தாரா? என்பது உச்சக்கட்ட காட்சியாக வைக்கப்பட்டு இருக்கிறது. படத்தில் டயானா அமீது, பார்வதி ஆகிய 2 கதாநாயகிகள் இருக்கிறார்கள்.’’