குறைந்த செலவில் சக்தி சிதம்பரத்தின் ‘தங்க முட்டை’


குறைந்த செலவில் சக்தி சிதம்பரத்தின் ‘தங்க முட்டை’
x
தினத்தந்தி 19 Jun 2021 12:31 PM GMT (Updated: 2021-06-19T18:01:13+05:30)

சக்தி சிதம்பரம் தனது 25-வது படத்தை தொடங்க இருக்கிறார். இந்த படத்துக்கு, ‘தங்க முட்டை’ என்று பெயர் சூட்டியிருக்கிறார்.

நகைச்சுவையுடன் பொழுதுபோக்கு அம்சங்கள் கலந்து ஜனரஞ்சகமான படங்களை தருவதில் சிறந்த டைரக்டர், சக்தி சிதம் பரம். இவர் இதுவரை 24 படங்களை டைரக்டு செய்திருக்கிறார். இவருடைய 24-வது படம், யோகி பாபு நடித்துள்ள ‘பேய் மாமா.’ படம் முடி வடைந்து திரைக்கு வர தயாராக இருக்கிறது.

இதையடுத்து சக்தி சிதம்பரம் தனது 25-வது படத்தை தொடங்க இருக்கிறார். இந்த படத்துக்கு, ‘தங்க முட்டை’ என்று பெயர் சூட்டியிருக்கிறார். படத்தை பற்றி இவர் சொல்கிறார்:

‘‘நான் இயக்கிய படங்களிலேயே அதிக மொழிகளில் ‘ரீமேக்’ செய்யப்பட்ட படம், ‘சார்லி சாப்ளின்.’ தெலுங்கு, கன்னடம், மலையாளம், போஜ்புரி, இந்தி உள்பட பல மொழிகளில் தயாராகி வெளிவந்தது. அதேபோல் மிக குறைந்த பட்ஜெட்டில், ‘தங்க முட்டை’யை உருவாக்கத் திட்டமிட்டுள்ளோம்.

தனியார் தொலைக்காட்சியில் பிரபலமான புகழ் கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகி கிடையாது.’’

Next Story