சினிமா செய்திகள்

நயன்தாராவின் ‘நெற்றிக்கண்’ ஜூலை விருந்தாக வருகிறது + "||" + Nayantara’s ‘Forehead’ is coming to the July feast

நயன்தாராவின் ‘நெற்றிக்கண்’ ஜூலை விருந்தாக வருகிறது

நயன்தாராவின் ‘நெற்றிக்கண்’ ஜூலை விருந்தாக வருகிறது
நயன்தாரா கண் பார்வையற்றவராக நடித்துள்ள ‘நெற்றிக்கண்’ படம் அடுத்த மாதம் (ஜூலை) விருந்தாக வருகிறது.
இந்த படத்தை மிலிந்த்ராவ் டைரக்டு செய்திருக்கிறார். நயன் தாராவின் காதலர் விக்னேஷ் சிவன் தயாரித்துள்ளார்.

கதைப்படி, நகரில் தொடர் கொலைகள் நடக்கிறது. கொலைகாரன் யார், கொலைகளுக்கான காரணம் என்ன? என்பது மர்மமாக இருக்கிறது.

நயன்தாரா பார்வையற்றவராக இருந்தாலும் அவரிடம் உள்ள அறிவாற்றலாலும், திறமையாலும் கொலைகாரனை கண்டுபிடிப்பது, கதை. இதில், இதுவரை எந்த படத்திலும் நடித்திராத அளவுக்கு சண்டை காட்சிகளில் துணிச்சலுடன் நடித்து இருக்கிறார்.

படத்துக்காக, ‘‘இதுவும் கடந்து போகும்’’ என்ற பாடலை பிரபல பின்னணி பாடகர் சித்ஸ்ரீராம் பாடியிருக்கிறார்.