சினிமா செய்திகள்

இந்தி பட உலகில் முந்துகிறார் டாப்சி + "||" + Actress Taapsee is ahead in the Hindi film world

இந்தி பட உலகில் முந்துகிறார் டாப்சி

இந்தி பட உலகில் முந்துகிறார் டாப்சி
இந்தி பட உலகில், நம்பர்-1 இடத்தில் இருந்த தீபிகா படுகோனேயை பின்னால் தள்ளிவிட்டு, அந்த இடத்தை கங்கனா ரணாவத் பிடித்தார்.
இருவருக்கும் இடையே கடுமையான போட்டி இருந்து வருகிறது. இந்த நிலையில், அவர்கள் இருவரையும் பின்னால் தள்ளிவிட்டு முந்திக்கொண்டு வருகிறார் டாப்சி. இவர் நடித்த 6 இந்தி படங்கள் தொடர்ந்து வெற்றி பெற்றதால், இந்தி பட உலகின் ராசியான கதாநாயகியாக டாப்சி உயர்ந்திருக்கிறார். ரூ.5 கோடி சம்பளம் வாங்கி வந்த அவர் இப்போது ரூ.8 கோடி கேட்கிறார். நல்ல கருத்துள்ள படங்களை டாப்சி தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அவர் நடித்து அடுத்து வெளிவர இருக்கும் இந்தி படம், ‘ரேஷ்மி ராக்கெட்.’ இது மாறுபட்ட கதையம்சம் கொண்ட படம். விளையாட்டு துறையில் பெண்களுக்கு வரக்கூடிய பிரச்சினைகளை பேசும் கதை, இது. கதையை எழுதியிருப்பவர், நம்மூர் டைரக்டர் நந்தா பெரியசாமி. ஆகார்ஷ் குரானா டைரக்டு செய்திருக்கிறார். ரேணி ஸ்குருவாலா தயாரித்துள்ளார். ‘‘இந்த படம் டாப்சியின் திரையுலக பயணத்தில் ஒரு மைல் கல்லாக இருக்கும்’’ என்று பாலிவுட்டில் பேசப்படுகிறது. இதைக் கேள்விப்பட்டு, ரேஷ்மி ராக்கெட்’ படத்தின் தமிழ், தெலுங்கு உரிமையை திருப்பதி பிரதர்ஸ் சுபாஷ் சந்திரபோஸ், ஒரு கோடி ரூபாய் கொடுத்து வாங்கியிருக்கிறார்.

தொடர்புடைய செய்திகள்

1. இந்தி பட உலகில் தயாரிப்பாளரான பிருதிவிராஜ்
தமிழில் கனா கண்டேன், பாரிஜாதம், மொழி, சத்தம் போடாதே, கண்ணாமூச்சி ஏனடா, வெள்ளித்திரை, நினைத்தாலே இனிக்கும் உள்ளிட்ட படங்களில் நடித்த பிருதிவிராஜ் மலையாள பட உலகில் முன்னணி கதாநாயகனாக இருக்கிறார்.