வடிவேல்-ஷங்கர் மோதல்: சமரச முயற்சியில் தயாரிப்பாளர்!


வடிவேல்-ஷங்கர் மோதல்: சமரச முயற்சியில் தயாரிப்பாளர்!
x
தினத்தந்தி 20 Jun 2021 6:17 AM GMT (Updated: 2021-06-20T11:47:35+05:30)

வடிவேல் கதாநாயகனாக நடித்த ‘இம்சை அரசன் 23-ம் புலிகேசி’ படத்தை தயாரித்தவர் டைரக்டர் ஷங்கர். படம் மிகப்பெரிய வெற்றி பெற்றதுடன் வசூல் சாதனையும் செய்தது.

இதைத்தொடர்ந்து அந்த படத்தின் இரண்டாம் பாகத்தை தயாரிக்க ஷங்கர் முன்வந்தார். இதற்கான பேச்சுவார்த்தைகள் நடந்தன. இந்த நிலையில் படத்தில் நடிக்க முடியாது என்று வடிவேல் கூறிவிட்டதாக தெரிகிறது. அவர் மீது ஷங்கர் 
வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணையில் உள்ளது. இதையடுத்து வடிவேலுவுக்கும், ஷங்கருக்கும் இடையே சமரசம் செய்து வைக்க பட அதிபர் ஐசரி கணேஷ் முயற்சி செய்து வருகிறார்.

Next Story