சினிமா செய்திகள்

பேத்திக்கு தலைவாரிவிடும் நடிகர் மம்முட்டி... + "||" + Mammootty is a super cool grandfather; proves Father's Day special post by Dulquer......

பேத்திக்கு தலைவாரிவிடும் நடிகர் மம்முட்டி...

பேத்திக்கு தலைவாரிவிடும் நடிகர் மம்முட்டி...
பேத்திக்கு தலைவாரிவிடும் நடிகர் மம்முட்டி...பலரும் பிக்சர் ஆஃப் தி டே என்று பதிவிட்டு வருகின்றனர்.
சென்னை

நடிகர் மம்முட்டியின் மகனான துல்கர் சல்மானும் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருகிறார். மலையாளத்தில் பல படங்களில் நடித்து வரும் துல்கர், தமிழில் வாயை மூடி பேசவும் படத்தின் மூலம் அறிமுகமானார்.

ஓ காதல் கண்மணி, சோலோ மற்றும் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் ஆகிய படங்களிலும் நடித்துள்ளார். கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படம் பெரும் ஹிட்டான நிலையில் தற்போது ஹே சினாமிகா என்ற படத்தில் நடித்து வருகிறார் துல்கர்.

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக உள்ள துல்கர் சல்மான் அவ்வப்போது தனது போட்டோக்கள், தனது குழந்தை மற்றும் குடும்பத்தினருடன் இருக்கும் போட்டோக்களை சமூக வலைதளங்களில் ஷேர் செய்து வருகிறார். அந்த வகையில் தற்போது அவர் ஷேர் செய்துள்ள போட்டோ ஒன்று பெரும் வைரலாகி வருகிறது.

அதாவது நடிகர் துல்கர் சல்மான் தனது அப்பாவான நடிகர் மம்முட்டி தனது மகளுக்கு தலை வாரிவிடும் போட்டோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார். தந்தையர் தினத்தை முன்னிட்டு இந்த போட்டோவை வாழ்த்துகளுடன் பதிவிட்டுள்ளார் துல்கர்.

இந்த போட்டோ இதுவரை 18 லட்சத்துக்கும் அதிகமான லைக்ஸ்களை குவித்து வருகிறது. இதனை பார்த்த ரசிகர்கள் கியூட் என்றும் அன்பை உணர முடிகிறது என்றும் பதிவிட்டுள்ளனர். பலரும் பிக்சர் ஆஃப் தி டே என்று பதிவிட்டு வருகின்றனர்.
தொடர்புடைய செய்திகள்

1. சினிமாவில் இருந்து விலகப் போவதாக பிரபல நடிகர் அறிவிப்பு...!
திரைப்படங்களில் நடித்தது மட்டுமன்றி அரசியல் ரீதியாக தனது கருத்துகளை டுவிட்டர் மூலம் துணிச்சலுடன் எடுத்து வைக்க தயங்காதவர் நடிகர் சித்தார்த்.
2. மாடல் அழகிகளுக்கு போதாத காலம்...! ஒரே மாதத்தில் 3-வது அழகி தற்கொலை
ஒரு மாத இடைவெளிக்குள் மாடல் ஒருவர் கேரளத்தில் தற்கொலை என்ற பெயரில் இறப்பது இது மூன்றாவது முறை.
3. பிளாஸ்டிக் அறுவை சிகிச்சையின் போது உயிர் இழந்த பிரபல இளம் நடிகை
இளம் நடிகை உடல் எடை மற்றும் கொழுப்பு குறைப்பு சிகிச்சைக்காக பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொள்ள பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் நேற்று அனுமதிக்கப்பட்டார்
4. "கமல் மிரட்டபட்டாரா" "விடியல முடிவு பண்றது நான்" கவனம் ஈர்த்த விக்ரம் பட விழா…!
விக்ரம் படத்திலிருந்து கமல்ஹாசன் எழுதி பாடியிருந்த 'பத்தல பத்தல' என்ற பர்ஸ்ட் சிங்கிள் வெளியாகி நல்ல வரவேற்பும் சர்ச்சைகளையும் சந்தித்தது.
5. பிறந்த நாள் விருந்துக்கு அனைவரையும் அழைத்து விட்டு வீட்டில் பிணமாக கிடந்த மாடல் அழகி
பிறந்த நாள் விருந்துக்கு அனைவரையும் அழைத்து விட்டு வீட்டில் பிணமாக கிடந்த மாடல் அழகி இது குறித்து கணவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.