சினிமா செய்திகள்

மீண்டும் தனுசுக்கு ஜோடி சாய் பல்லவி + "||" + Actor Dhanush pair Sai Pallavi again

மீண்டும் தனுசுக்கு ஜோடி சாய் பல்லவி

மீண்டும் தனுசுக்கு ஜோடி சாய் பல்லவி
தனுசுக்கு இந்தியில் அந்த்ராங்கி ரே, ஹாலிவுட் படமான தி கிரே மேன் ஆகியவை கைவசம் உள்ளன.
இந்தநிலையில் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய 3 மொழிகளில் தயாராகும் புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார்.  இந்த படத்தை தெலுங்கு டைரக்டர் சேகர் கம்முலா இயக்குகிறார். இவர் சிறந்த இயக்குனருக்கான தேசிய விருது பெற்றவர். தனுஷ் படத்தை அதிக பொருட் செலவில் எடுக்கின்றனர். இதர நடிகர் நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு நடக்கிறது. தி கிரேமேன் ஹாலிவுட் படத்தில் நடிக்க அமெரிக்காவில் முகாமிட்டுள்ள தனுஷ் சென்னை திரும்பியதும் படப்பிடிப்பை தொடங்க உள்ளனர். இந்த படத்தில் தனுஷ் ஜோடியாக நடிப்பது யார் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. 

சாய்பல்லவிக்கு அதிக வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஏற்கனவே மாரி 2-ம் பாகம் படத்தில் தனுஷ், சாய்பல்லவி ஜோடியாக நடித்து இருந்தனர். இந்த படத்தில் இருவரும் இணைந்து ஆடிய ரவுடிபேபி... பாடல் யூடியூப் தளத்தில் சாதனை நிகழ்த்தியது. சேகர் கம்முலு இயக்கிய பிடா, லவ் ஸ்டோரி தெலுங்கு படங்களிலும் சாய்பல்லவி நடித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. சிவகார்த்திகேயன் உடன் நடிக்கும் சாய் பல்லவி!
சிவகார்த்திகேயன் அடுத்ததாக நடிக்கவுள்ள படத்தின் கதாநாயகியாக சாய் பல்லவி இணைந்துள்ளார்.
2. பிரபல நடிகருக்கு தங்கையாக நடிக்கும் சாய் பல்லவி
மலையாளம் தமிழ் தெலுங்கு மொழிகளில் நடித்து பிரபல நடிகையாக வலம் வரும் சாய் பல்லவி அடுத்ததாக தங்கை வேடத்தில் நடிக்க இருக்கிறார்.
3. மாறுவேடத்தில் படம் பார்த்த சாய் பல்லவி - அதிர்ச்சியடைந்த ரசிகர்கள்
சமீபத்தில் வெளியாகி அனைவரையும் கவர்ந்த திரைப்படத்தை யாருக்கும் தெரியாமல் மாறுவேடத்தில் சென்று நடிகை சாய் பல்லவி படம் பார்த்து இருக்கிறார்.