சினிமா செய்திகள்

3 புதிய படங்களில் நயன்தாரா + "||" + Nayanthara acting in 3 new films

3 புதிய படங்களில் நயன்தாரா

3 புதிய படங்களில் நயன்தாரா
நயன்தாரா நடித்த நிழல் மலையாள படம் கடந்த ஏப்ரல் மாதம் வெளியானது. தற்போது நெற்றிக்கண், அண்ணாத்த, காத்து வாக்குல ரெண்டு காதல் ஆகிய படங்கள் கைவசம் உள்ளன.
இவற்றில் நெற்றிக்கண் படப்பிடிப்பு முடிந்து விரைவில் வெளியாக உள்ளது. இதில் பார்வையற்றவராக நடித்து இருக்கிறார். அண்ணாத்த படத்திலும் நடித்து முடித்து விட்டார். இந்த படத்தில் வக்கீல் வேடத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது. 
காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தை அவரது காதலர் விக்னேஷ் சிவன் இயக்குகிறார். இதில் விஜய்சேதுபதி ஜோடியாக நடிக்கிறார். படப்பிடிப்பு இறுதிகட்டத்தில் உள்ளது. இதையடுத்து மேலும் 3 புதிய படங்களில் நடிக்க இருக்கிறார். 

அதில் ஒருபடம் மலையாளத்தில் வெளியான லூசிபர் படத்தின் தெலுங்கு ரீமேக் ஆகும். மலையாளத்தில் மஞ்சுவாரியர் நடித்த கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். மற்ற 2 படங்களும் கதாநாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதையம்சம் கொண்டவை. தமிழில் தயாராகும் இந்த படங்கள் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. நாளை வெளியாகிறது காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தின் அடுத்த பாடல்...!
"நான் பிழை" என்ற பாடல் நாளை வெளியிடப்படும் என விக்னேஷ் சிவன் தெரிவித்துள்ளார்.
2. துபாயில் புத்தாண்டை உற்சாகமாக கொண்டாடிய நயன்தாரா- விக்னேஷ் சிவன்... வைரலாகும் புகைப்படங்கள்...!
விக்னேஷ் சிவன்- நயன்தாரா ஜோடி இந்த ஆண்டு புத்தாண்டை துபாயில் கொண்டாடியுள்ளனர்.
3. ஆஸ்கார் போட்டியில் இருந்து வெளியேறிய 'கூழாங்கல்'
'கூழாங்கல்' திரைப்படம் ஆஸ்கார் வெளியிட்டுள்ள இறுதிப் பட்டியலில் இடம்பெறாமல் விருது போட்டியில் இருந்து வெளியேறி உள்ளது.
4. மீண்டும் சொந்த குரலில் டப்பிங் செய்கிறார் நயன்தாரா
காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படத்தில் நயன்தாரா சொந்தக் குரலில் டப்பிங் பேசுகிறார்.
5. பிரபல நடிகர்கள் வசிக்கும் இடத்தில் குடியேறும் நயன்தாரா
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கும் நயன்தாரா, பிரபல நடிகர்கள் வசிக்கும் இடத்தில் வீடு வாங்கி இருக்கிறார்.

அதிகம் வாசிக்கப்பட்டவை