நடிகை ஷாலு ஷம்முக்கு விரைவில் திருமணம்


நடிகை ஷாலு ஷம்முக்கு விரைவில் திருமணம்
x
தினத்தந்தி 21 Jun 2021 12:01 PM GMT (Updated: 2021-06-21T17:31:56+05:30)

சிவகார்த்திகேயனின் வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் நடித்து பிரபலமானவர் ஷாலு ஷம்மு.

இவர் ரசிகர்களுடன் சமூக வலைத்தளத்தில் கலந்துரையாடினார். அப்போது ரசிகர்கள் கேட்ட பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தார். உங்கள் திருமணம் எப்போது என்ற கேள்விக்கு வீட்டில் மாப்பிள்ளை பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள் என்று தெரிவித்தார். இதன் மூலம் அவருக்கு திருமண ஏற்பாடுகள் நடப்பதும் விரைவில் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்து இருப்பதும் உறுதியாகி உள்ளது. இன்னொரு ரசிகர் சினிமாவில் நடிக்க வாய்ப்பு தேடும் பெண்களை படுக்கைக்கு அழைக்கும் பிரச்சினைகள் இருப்பது உண்மையா என்று கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளித்த ஷாலு ஷம்மு ஒவ்வொரு சூழ்நிலையிலும் முடிவு எடுக்கும் உரிமை அவரவருக்கு இருக்கிறது. ஒருவரின் முடிவை இன்னொருவர் தலையிட்டு கட்டாயப்படுத்தவோ. வலியுறுத்தவோ முடியாது என்றார் சில ரசிகர்கள் உடல் குறித்து ஆபாச கேள்விகளை எழுப்பினர். அதற்கு அவர்கள் பாணியிலேயே பதிலடி கொடுத்தார்.

Next Story