விவாகரத்துக்கு பிறகு மீண்டும் இணைந்த நட்சத்திர தம்பதி


விவாகரத்துக்கு பிறகு மீண்டும் இணைந்த நட்சத்திர தம்பதி
x
தினத்தந்தி 21 Jun 2021 12:14 PM GMT (Updated: 2021-06-21T17:44:11+05:30)

நடிகர் ரஞ்சித்தும், நடிகை பிரியா ராமனும் கடந்த 1999-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர்.

இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். பிரியா ராமன் 1993-ல் ரஜினிகாந்த் தயாரித்து நடித்த வள்ளி படத்தில் அறிமுகமாகி சூர்யவம்சம், பொன்மனம், அரிச்சந்திரா, புதுமைப்பித்தன், நேசம் புதிது, சின்னராஜா உள்ளிட்ட படங்களில் 
நடித்துள்ளார். மலையாளம், தெலுங்கு மொழிகளிலும் அதிக படங்களில் நடித்து இருக்கிறார். ரஞ்சித்தும் 1990-களில் முன்னணி நடிகராக வலம் வந்தார். சிந்துநதி பூ, மறுமலர்ச்சி, அவதார புருஷன், நட்புக்காக, தேசிய கீதம் உள்பட பல 
படங்களில் நடித்து இருக்கிறார். சில வருடங்களுக்கு பிறகு ரஞ்சித்தும் பிரியாராமனும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு கடந்த 2014-ல் விவாகரத்து செய்து பிரிந்தனர். அதன்பிறகு மீண்டும் நட்பானார்கள். ஆனாலும் பொது நிகழ்ச்சிகளுக்கு ஒன்றாக வரவில்லை. ரஞ்சித் தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது திருமண நாளையொட்டி பிரியாராமனுடன் ஜோடியாக இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். அதில் ''நன்றிகள் கோடி தங்கங்களே, என் அன்பு தங்கங்களே நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள். எங்கள் வாழ்க்கை மிகவும் அழகாகிறது. நன்றியும் மகிழ்ச்சியும் தங்கங்களே'' என்ற பதிவையும் வெளியிட்டு உள்ளார். விவாகரத்தாகி 7 வருடங்களுக்கு பிறகு இருவரையும் ஒன்றாக பார்த்த ரசிகர்கள் வலைத்தளத்தில் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

Next Story