பணம் திருடியதாக நடிகை மீது புகார்


பணம் திருடியதாக நடிகை மீது புகார்
x
தினத்தந்தி 23 Jun 2021 1:03 AM GMT (Updated: 2021-06-23T06:33:23+05:30)

பணம் திருடியதாக நடிகை மீது புகார்.

பிரபல இந்தி நடிகை மினிஷா லம்பா. இவர் 2005-ல் யஹான் படம் மூலம் அறிமுகமானார். கார்பரேட், ராக்கி, கிட்நாப், அனாமிகா, ஜோக்கர் உள்பட பல படங்களில் நடித்து இருக்கிறார்.

மினிஷா லம்பா 2015-ல் ரயன் என்ற தொழில் அதிபரை மணந்து பின்னர் விவாகரத்து செய்து விட்டார். இந்த நிலையில் திருட்டு புகார் ஒன்றில் சிக்கியதாக ரகசிய தகவல் ஒன்றை மினிஷா லம்பா தெரிவித்து உள்ளார்.

இதுகுறித்து அவர் அளித்துள்ள பேட்டியில், ‘’நான் நடிகையாகும் ஆசையோடு மும்பை வந்த புதிதில் பணம் இல்லாமல் கஷ்டப்பட்டேன். விடுதி ஒன்றில் மாத வாடகை ரூ.5 ஆயிரம் கொடுத்து தங்கி இருந்தேன். ஆனால் அந்த விடுதியின் உரிமையாளர் ஒருநாள் அவரது அலமாரியில் இருந்து நான் பணத்தை திருடிவிட்டதாக பழி சொன்னார். எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. நான் பணத்தை திருடவில்லை. இதனால் 2 நாட்களில் அந்த விடுதியை விட்டு வெளியேறி மாத வாடகை 7 ஆயிரத்தில் ஒரு வீட்டை பார்த்து தங்கினேன். அந்த சம்பவத்தை இன்றுவரை என்னால் மறக்க முடியவில்லை''’ என்றார்.

Next Story