சினிமா செய்திகள்

பண நெருக்கடியால் 9 வருடம் முடங்கிய நயன்தாரா படம் + "||" + Nayanthara movie which was paralyzed for 9 years due to financial crisis

பண நெருக்கடியால் 9 வருடம் முடங்கிய நயன்தாரா படம்

பண நெருக்கடியால் 9 வருடம் முடங்கிய நயன்தாரா படம்
பண நெருக்கடியால் 9 வருடம் முடங்கிய நயன்தாரா படம்.
நயன்தாரா 2005-ல் ‘ஐயா' படத்தில் அறிமுகமாகி தமிழ், தெலுங்கில் முன்னணி கதாநாயகியாக உயர்ந்து அதிக சம்பளம் பெறும் தென்னிந்திய நடிகைகள் பட்டியலில் முதல் இடத்தையும் பிடித்து 16 வருடங்களாக கொடி கட்டி பறக்கிறார்.


ஆனால் நயன்தாரா நடித்துள்ள ஆரடுகுலா புல்லட் என்ற தெலுங்கு படம் மட்டும் பண நெருக்கடியால் திரைக்கு வராமல் 9 வருடங்களாக முடங்கி இருக்கிறது. இந்த படத்தில் கதாநாயகனாக கோபிசந்த் நடித்துள்ளார். இதன் படப்பிடிப்பை 2012-ல் தொடங்கினர். முழு படப்பிடிப்பையும் முடித்து அந்த வருடமே திரைக்கு கொண்டு வரவும் திட்டமிட்டனர்.

ஆனால் படத்தின் இயக்குனர் பூபதி பாண்டியன் சில பிரச்சினைகளால் படத்தில் இருந்து விலகியதால் தாமதம் ஏற்பட்டது. பின்னர் கோபால் என்பவர் இயக்கினார். படத்தை முடித்து 2017-ல் தணிக்கை குழுவுக்கு அனுப்பி யூஏ சான்றிதழ் பெற்றனர். அதன்பிறகும் பண நெருக்கடி உள்ளிட்ட சில பிரச்சினைகளால் ரிலீஸ் தள்ளிப்போனது. இந்த நிலையில் தற்போது பிரச்சினைகள் அனைத்தும் தீர்க்கப்பட்டு விட்டதால் படத்தை விரைவில் திரைக்கு கொண்டு வர ஏற்பாடுகள் நடக்கின்றன.


தொடர்புடைய செய்திகள்

1. ஜெயலலிதா வாழ்க்கை கதை தலைவி படம் 2-ம் பாகம்?
மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா வாழ்க்கை கதையாக தயாராகி உள்ள தலைவி படத்துக்கு ரசிகர்கள் மத்தியிலும், அரசியல் வட்டாரத்திலும் பெரிய எதிர்பார்ப்பு உள்ளது.
2. ஹரீஸ் கல்யாண்-பிரியா பவானி சங்கருடன் ‘ஓ மணப்பெண்ணே’
காதலுக்கும், காமெடிக்கும் முக்கியத்துவம் உள்ள படங் களுக்கு இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பினர் மத்தி யிலும் வரவேற்பு இருந்து வருகிறது என்பதற்கு உதாரணம், ‘பெல்லி சூப்புலு’ என்ற தெலுங்கு படம்.
3. நயன்தாரா ரூ.10 கோடி சம்பளம் கேட்கிறார்?
தென்னிந்திய கதாநாயகிகளில் மிக அதிக சம்பளம் வாங்குபவர் நயன்தாராதான்.
4. மீண்டும் சர்ச்சையில் சிக்கிய விஜய் படம்
மீண்டும் சர்ச்சையில் சிக்கிய விஜய் படம்.
5. நயன்தாராவின் ‘நெற்றிக்கண்' படம் ரூ.25 கோடிக்கு விற்பனை
நடிகர் ரஜினிகாந்த் உடன் 'அண்ணாத்த' படத்தில் நடித்துள்ள நயன்தாரா அடுத்தப்படியாக 'காத்து வாக்குல ரெண்டு காதல்' என்ற படத்தில் நடித்து வருகிறார்.