ஜெயலலிதா வாழ்க்கை கதை 'தலைவி' படத்துக்கு தணிக்கையில் ‘யு’ சான்று


ஜெயலலிதா வாழ்க்கை கதை தலைவி படத்துக்கு தணிக்கையில் ‘யு’ சான்று
x
தினத்தந்தி 23 Jun 2021 1:09 AM GMT (Updated: 2021-06-23T06:39:56+05:30)

ஜெயலலிதா வாழ்க்கை கதை 'தலைவி' படத்துக்கு தணிக்கையில் ‘யு’ சான்று.

மறைந்த முதல் அமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை, தலைவி என்ற பெயரில் சினிமா படமாக தயாராகி உள்ளது. இதில் ஜெயலலிதா வேடத்தில் கங்கனா ரணாவத், எம்.ஜி.ஆர். கதாபாத்திரத்தில் அரவிந்த் சாமி ஆகியோர் நடித்துள்ளனர். விஜய் இயக்கி உள்ளார். தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய 3 மொழிகளில் தயாராகி உள்ளது. இதன் படப்பிடிப்பு ஏற்கனவே முடிந்துள்ளது. தலைவி படத்தின் தமிழ் பதிப்பை தணிக்கைக்கு அனுப்பினர். தணிக்கை குழுவினர் படத்தை பார்த்து காட்சிகளை வெட்டாமல் ‘யு' சான்றிதழ் அளித்துள்ளனர்.

ஏற்கனவே தலைவி படத்தை கடந்த ஏப்ரல் மாதம் திரைக்கு கொண்டு வர திட்டமிட்டு கொரோனா ஊரடங்கினால் முடங்கியது. ஓ.டி.டி. தளத்தில் வெளியாகலாம் என்று பரவிய தகவலை படக்குழுவினர் மறுத்தனர். விரைவில் தியேட்டர்களை திறக்க அனுமதி கிடைக்கும் என்று எதிர்பார்க்கின்றனர். படத்தை ஆகஸ்டு மாதம் திரைக்கு கொண்டு வரும் முயற்சியில் ஈடுபட்டு உள்ளனர்.

Next Story