சினிமா செய்திகள்

சினிமாவில் ஆணாதிக்கம் -நடிகை ராஷிகன்னா + "||" + Patriarchy in cinema -Actress Rashikanna

சினிமாவில் ஆணாதிக்கம் -நடிகை ராஷிகன்னா

சினிமாவில் ஆணாதிக்கம் -நடிகை ராஷிகன்னா
தமிழில் இமைக்கா நொடிகள், அயோக்யா, சங்கத்தமிழன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள ராஷி கன்னா தெலுங்கிலும் முன்னணி நடிகையாக இருக்கிறார்.
தமிழில் இமைக்கா நொடிகள், அயோக்யா, சங்கத்தமிழன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள ராஷி கன்னா தெலுங்கிலும் முன்னணி நடிகையாக இருக்கிறார். நடிகை ராஷிகன்னா அளித்துள்ள பேட்டியில், “எனக்கு ஊஹலு குஸகுஸலடே” தெலுங்கு படத்தில் நல்ல கதாபாத்திரம் அமைந்து திறமையான நடிகை என்ற பெயரும் கிடைத்தது. அதன்பிறகு வணிக பட வாய்ப்புகளே வந்தன. சினிமா துறை ஆணாதிக்கம் உள்ள துறையாகவே இருக்கிறது.


ஆனாலும் பெண்கள் திறமையை வெளிப்படுத்தி வளர்ந்து கொண்டு இருக்கிறார்கள். அனுஷ்கா, சமந்தா மாதிரி திறமையான நடிகையாக இருந்தால் மட்டுமே சினிமாவில் நிலைக்க முடியும். அவர்கள் இருவருமே தென்னிந்திய நடிகைகள் மீதான மக்களின் பார்வையை மாற்றி இருக்கிறார்கள். அவர்களுக்கு முன்புவரை நடிகைகள் என்றால் பார்க்க அழகாக இருக்க வேண்டும். பாடல் காட்சிகளில் நடனம் ஆட வேண்டும் என்ற நிலைமைதான் இருந்தது.

இப்போது நன்றாக நடிக்க தெரிய வேண்டும் என்ற நிலைமைக்கு மாறி இருக்கிறது. தென்னிந்திய திரையுலகில் திறமையான நடிகைகள் இருக்கிறார்கள். நான் செல்ல வேண்டிய தூரம் இன்னும் அதிகமாக இருக்கிறது’' என்றார்.

தொடர்புடைய செய்திகள்

1. பணம் திருடியதாக நடிகை மீது புகார்
பணம் திருடியதாக நடிகை மீது புகார்.
2. ஊரடங்கில் ஊர் சுற்றிய நடிகர்-நடிகை மீது வழக்கு
கொரோனா பரவலை தடுக்க பல மாநிலங்களில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளன. ஊரடங்கை மீறி வெளியே வருபவர்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்படுகிறது.
3. விக்ரம் பட நடிகை 2-வது திருமணம்?
தமிழில் சத்யராஜ் ஜோடியாக அழகேசன், விக்ரமுடன் கண்களின் வார்த்தைகள் மற்றும் தாயே புவனேஸ்வரி, உள்ளிட்ட படங்களில் நடித்தவர் பிரேமா, பெங்களூருவை சேர்ந்த இவர் கன்னடத்தில் 70-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து முன்னணி நடிகையாக இருக்கிறார்.
4. கவர்ச்சியான உடைகள் அணிவதை விமர்சிப்பதா? நடிகை ரைசா கண்டனம்
கவர்ச்சியான உடைகள் அணிவதை விமர்சிப்பதா? நடிகை ரைசா கண்டனம்.
5. சினிமாவில் எனக்கும் பாலியல் தொல்லைகள் -நடிகை சோனா
சினிமாவில் எனக்கும் பாலியல் தொல்லைகள் -நடிகை சோனா.