தெலுங்கு நடிகர் சங்க தேர்தல்: பிரகாஷ்ராஜை எதிர்த்து நடிகை ஜீவிதா போட்டி


தெலுங்கு நடிகர் சங்க தேர்தல்: பிரகாஷ்ராஜை எதிர்த்து நடிகை ஜீவிதா போட்டி
x
தினத்தந்தி 24 Jun 2021 1:19 AM GMT (Updated: 2021-06-24T06:49:48+05:30)

தெலுங்கு நடிகர் சங்க தேர்தல்: பிரகாஷ்ராஜை எதிர்த்து நடிகை ஜீவிதா போட்டி.

தெலுங்கு நடிகர் சங்க தலைவராக இருக்கும் நரேஷ் தலைமையிலான நிர்வாகிகள் பதவி காலம் முடிவதால் புதிய நிர்வாகிகளை தேர்வு செய்ய தேர்தல் நடத்தப்பட உள்ளது. இந்த தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட வில்லன் நடிகர் பிரகாஷ்ராஜ் முடிவு செய்துள்ளார்.

பிரகாஷ்ராஜை எதிர்த்து பிரபல தெலுங்கு நடிகர் மோகன்பாபுவின் மகன் விஷ்ணு மஞ்சு போட்டியிடுவதாக கூறப்படுகிறது. ஏற்கனவே தெலுங்கு திரையுலகில் நடிகர் சிரஞ்சீவிக்கும், மோகன்பாபுவுக்கும் பனிப்போர் நிலவுகிறது. எனவே சிரஞ்சீவியின் ஆதரவை பெறும் முயற்சியில் பிரகாஷ்ராஜ் ஈடுபட்டு உள்ளார்.

இந்த நிலையில் நடிகை ஜீவிதாவும் தலைவர் பதவிக்கு போட்டியிட முடிவு செய்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. கடந்த தேர்தலில் ஜீவிதா நடிகர் சங்க செயலாளர் பதவிக்கும், அவரது கணவர் நடிகர் ராஜசேகர் துணைத்தலைவர் பதவிக்கும் போட்டியிட்டு வெற்றி பெற்றனர். பின்னர் நரேசுடன் ஏற்பட்ட மோதலில் ராஜசேகர் தனது பதவியை ராஜினாமா செய்தார். ஜீவிதா தமிழ் திரையுலகில் 1980-களில் முன்னணி கதாநாயகியாக இருந்தார்.

Next Story