மிதாலி ராஜ் வாழ்க்கை படத்தின் டைரக்டர் விலகல்


மிதாலி ராஜ் வாழ்க்கை படத்தின் டைரக்டர் விலகல்
x
தினத்தந்தி 24 Jun 2021 1:24 AM GMT (Updated: 2021-06-24T06:54:50+05:30)

மிதாலி ராஜ் வாழ்க்கை படத்தின் டைரக்டர் விலகல்.

கிரிக்கெட் வீராங்கனை மிதாலி ராஜ் வாழ்க்கை சபாஷ் மிது என்ற பெயரில் படமாகிறது. இதில் மிதாலி ராஜ் கதாபாத்திரத்தில் கிரிக்கெட் பயிற்சிகள் எடுத்து டாப்சி நடித்து வருகிறார். இந்த படத்தை ராகுல் தோலக்கியா இயக்கி வந்தார். இந்த நிலையில் சபாஷ் மிது படத்தை இயக்க மறுத்து ராகுல் தோலக்கியா திடீரென்று விலகி உள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சபாஷ் மிது கதையை படித்ததுமே இந்த படத்தை நிச்சயம் இயக்க வேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்டது. படப்பிடிப்பை 2019-ல் தொடங்கினோம். தற்போது இந்த படத்தை தொடர்ந்து இயக்க முடியாத நிலையில் இருக்கிறேன். ஆனாலும் சபாஷ் மிது படமாக தயாராக படக்குழுவினருக்கு உதவியாக இருப்பேன். கொரோனா பரவல் எல்லோருடையை வேலைகளிலும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. நானும் அதில் இருந்து தப்பவில்லை. படக்குழுவினருக்கு எனது வாழ்த்துக்கள்’' என்று கூறியுள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தற்போது ராகுல் தோலக்கியாவுக்கு பதிலாக சபாஷ் மிது படத்தை இயக்க ஸ்ரீஜித் முகர்ஜி ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளார்.

Next Story