சினிமா செய்திகள்

பிரபல பாடலாசிரியர் கொரோனாவுக்கு பலி + "||" + Famous songwriter kills Corona

பிரபல பாடலாசிரியர் கொரோனாவுக்கு பலி

பிரபல பாடலாசிரியர் கொரோனாவுக்கு பலி
பிரபல பாடலாசிரியர் கொரோனாவுக்கு பலி.
மலையாள பட உலகில் முன்னணி பாடலாசிரியராக இருந்தவர் பூவாசல் காதர். இவர் இசையமைப்பாளர்கள் கே.வி.மகாதேவன், இளையராஜா, சங்கர் கணேஷ், கங்கை அமரன் இசையில் பெரிய நடிகர்கள் படங்களுக்கு பாடல்கள் எழுதி உள்ளார்.

கே.ஜே.ஜேசுதாஸ், ஜெயச்சந்திரன், பி.சுசீலா, எஸ்.ஜானகி, வாணி ஜெயராம், சித்ரா உள்ளிட்ட முன்னணி பாடகர்கள் இவரது வரிகளில் பாடி இருக்கிறார்கள். பூவாசல் காதருக்கு சமீபத்தில் உடல்நலக்குறைவு ஏற்பட்டு பரிசோதனையில் கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதையடுத்து திருவனந்தபுரத்தில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்றும் பலன் இன்றி மரணம் அடைந்தார். அவருக்கு வயது 72.


பாடகி சித்ரா வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள இரங்கல் பதிவில், “மலையாளத்தில் அழகான பாடல்களை தந்தவர் பூவாசல் காதர். எனது முதல் பாடலான விருது பெற்ற பாடல் உள்பட பல பாடல்களை எழுதி உள்ளார். அவரது ஆன்மா சாந்தியடையட்டும்'' என்று கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. தனியார் கம்பெனியில் மேற்கூரை அமைக்கும்போது 40 அடி உயரத்தில் இருந்து விழுந்த தொழிலாளி பலி
தனியார் கம்பெனியில் கட்டப்பட்டு வரும் குடோனுக்கு மேற்கூரை அமைக்கும்போது சுமார் 40 அடி உயரத்தில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.
2. கார் கவிழ்ந்து 3 நண்பர்கள் பலி
கார் கவிழ்ந்து 3 நண்பர்கள் பரிதாபமாக இறந்தனர். மேலும் 3 பேர் படுகாயம் அடைந்தனர்.
3. பாகிஸ்தானில் பயங்கரவாதிகள் தாக்குதலில் 2 ராணுவ வீரர்கள் பலி
பாகிஸ்தானில் பலுசிஸ்தான் மாகாணத்தில் பயங்கரவாதிகள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர்.
4. மறைமலைநகரில் பஸ் மோதி பெட்ரோல் நிலைய பெண் ஊழியர் பலி
மறைமலைநகரில பஸ் மோதி பெட்ரோல் நிலைய பெண் ஊழியர் பரிதாபமாக இறந்தார்.
5. விளையாட்டாக காலால் எட்டி உதைத்தபோது கிணற்றில் தவறி விழுந்து நண்பர் பலி
விளையாட்டாக காலால் எட்டி உதைத்தபோது கிணற்றில் தவறி விழுந்து நண்பர் பலி.