சினிமா செய்திகள்

நடிகர் மோகன்லால் படத்துக்கு எதிர்ப்பு + "||" + Opposition to the film by actor Mohanlal

நடிகர் மோகன்லால் படத்துக்கு எதிர்ப்பு

நடிகர் மோகன்லால் படத்துக்கு எதிர்ப்பு
நடிகர் மோகன்லால் படத்துக்கு எதிர்ப்பு.
மோகன்லால் நடித்துள்ள மரைக்காயர் அரபிக்கடலிண்டே சிம்ஹம் மலையாள படம் ரூ.100 கோடி செலவில் தயாராகி உள்ளது. அர்ஜுன், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட மேலும் பலரும் நடித்துள்ளனர்.

இந்த படத்தை தமிழ் உள்ளிட்ட மற்ற மொழிகளிலும் வெளியிட திட்டமிட்டு உள்ளனர். இதன் படப்பிடிப்பு 2019-ம் ஆண்டிலேயே முடிந்து கொரோனா பரவலால் முடங்கியது. இதுபோல் திரைக்கு வர தயாராக இருந்த பகத் பாசிலின் மாலிக், நிவின் பாலி நடித்துள்ள துறைமுகம், துல்கர் சல்மானின் குரூப், பிருதிவிராஜின் குருதி, ஆடு ஜீவிதம் உள்பட 10-க்கும் மேற்பட்ட படங்கள் முடிந்து திரைக்கு வர தயாராக உள்ளன.


இந்த நிலையில் மோகன்லாலின் அரபிக்கடலிண்டே சிம்ஹம் படத்தை ஆகஸ்டு 12-ந் தேதி கேரளா முழுவதும் 600 தியேட்டர்களில் 3 வாரங்கள் தொடர்ச்சியாக திரையிடுவது என்றும், அந்த 3 வாரமும் வேறு எந்த படங்களையும் திரையிட வேண்டாம் என்றும் தயாரிப்பாளர்கள், தியேட்டர் அதிபர்கள், வினியோகஸ்தர்கள் சங்கங்கள் ஒப்பந்தம் போட்டுள்ளன. ரசிகர்களை தியேட்டர்களுக்கு இழுக்க ஒரு பெரிய படம் தேவை என்று இந்த முடிவை எடுத்துள்ளன. இது ஒருதலைப்பட்சமான முடிவு என்று மற்ற படங்களின் தயாரிப்பாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

1. காவலில் எடுத்து விசாரிக்கவேண்டி இருப்பதாக கூறி முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு முன்ஜாமீன் வழங்க போலீசார் எதிர்ப்பு தீர்ப்பு ஒத்திவைப்பு
நடிகை சாந்தினி அளித்த புகாரில் முன்னாள் அமைச்சர் மணிகண்டனை காவலில் எடுத்து விசாரிக்க வேண்டி இருப்பதாக கூறி அவருக்கு முன்ஜாமீன் வழங்க போலீசார் எதிர்ப்பு தெரிவித்தனர். அதைத்தொடர்ந்து முன்ஜாமீன் மனு மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் நீதிபதி தள்ளிவைத்தார்.
2. சமந்தாவுக்கு எதிர்ப்பு வலுக்கிறது
‘பாணா காத்தாடி’ படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர், சமந்தா. அந்த படத்தில் அவர், அதர்வாவுக்கு ஜோடியாக நடித்து இருந்தார். சென்னை பல்லாவரத்தில் வசித்து வந்த இவர் ஆரம்பத்தில் பிற மொழி படங்களில் நடிப்பதில் ஆர்வம் காட்டினார்.
3. ஓம் முத்திரை கம்மல் அணிவதா? பிரபல கவர்ச்சி நடிகைக்கு எதிர்ப்பு
ஓம் முத்திரை கம்மல் அணிவதா? பிரபல கவர்ச்சி நடிகைக்கு எதிர்ப்பு.
4. ஜப்பானில் 80 சதவீத மக்கள் ஒலிம்பிக் போட்டிகள் நடத்த எதிர்ப்பு
ஜப்பானில் இந்த ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளை நடத்த அந்நாட்டில் 80 சதவீத மக்கள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.
5. தமிழகம் மீண்டும் போர்க்களமாக மாறும் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க சீமான் எதிர்ப்பு
தமிழகம் மீண்டும் போர்க்களமாக மாறும் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க சீமான் எதிர்ப்பு.