துப்பாக்கி 2-ம் பாகத்தில் கமல்?


துப்பாக்கி 2-ம் பாகத்தில் கமல்?
x
தினத்தந்தி 24 Jun 2021 1:31 AM GMT (Updated: 2021-06-24T07:01:46+05:30)

விஜய் நடித்து 2012-ல் திரைக்கு வந்த துப்பாக்கி அவரது வெற்றி படங்கள் பட்டியலில் முக்கிய படமாக அமைந்தது. விஜய் ராணுவ உளவு அதிகாரியாக வந்தார். இந்த படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கினார்.

விஜய் நடித்து 2012-ல் திரைக்கு வந்த துப்பாக்கி அவரது வெற்றி படங்கள் பட்டியலில் முக்கிய படமாக அமைந்தது. விஜய் ராணுவ உளவு அதிகாரியாக வந்தார். இந்த படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கினார்.

துப்பாக்கி படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கும் முயற்சிகள் நடப்பதாக ஏற்கனவே பேசப்பட்டது. இதுகுறித்து ஏ.ஆர்.முருகதாஸ் கூறும்போது, “துப்பாக்கி 2-ம் பாகம் எடுக்க வேண்டும் என்ற ஆசை உள்ளது. இரண்டாம் பாகம் உருவாகும்போதே அதை முதல் பாகத்துடன் கண்டிப்பாக ஒப்பிட்டு பேசுவார்கள். இரண்டாம் பாகம் கதைக்கான பொறி தோன்றும்போது எடுப்பேன்’’ என்றார்.

இந்த நிலையில் முருகதாஸ் தற்போது துப்பாக்கி 2-ம் பாகத்துக்கான கதையை தயார் செய்து விட்டதாக கூறப்படுகிறது. துப்பாக்கி 2-ம் பாகத்திலும் விஜய் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவருக்கு பதிலாக கமல்ஹாசன் நடிக்க உள்ளதாக புதிய தகவல் வலைத்தளத்தில் பரவி வருகிறது. ஆனால் இதனை முருகதாஸ் தரப்பில் உறுதிப்படுத்தவில்லை.

ஏற்கனவே முந்தையை விஜய்யின் 65-வது படத்தை முருகதாஸ்தான் இயக்குவதாக இருந்தது. ஆனால் கதை விஜய்க்கு திருப்தியாக இல்லாததால் முருகதாஸ் விலகியதாகவும், அவருக்கு பதில் நெல்சன் தீலீப்குமார் இயக்கத்தில் நடிக்கிறார் என்றும் கூறப்பட்டது.

Next Story