வித்யாவுக்குள் நம்பிக்கையை ஏற்படுத்திய டைரக்டர்


வித்யாவுக்குள் நம்பிக்கையை ஏற்படுத்திய டைரக்டர்
x
தினத்தந்தி 25 Jun 2021 12:45 AM GMT (Updated: 2021-06-25T06:15:39+05:30)

சினிமாவில் முக்கிய வேடங்களிலும், டி.வி. தொடர்களில் கதைநாயகியாகவும் நடித்த வித்யா பிரதீப் அளித்த பேட்டி, இது.

கேள்வி: உங்களின் சொந்த ஊர் எது?

பதில்: கேரள மாநிலம் ஆலப்புழா. தற்போது சென்னையில் வசித்து வருகிறேன்.

கேள்வி: எதுவரை படித்து இருக்கிறீர்கள்?

பதில்: ஸ்டெம் செல் பயாலஜியில் முனைவர் பட்டம் பெற்றுள்ளேன்.

கேள்வி: திரையுலகுக்கு எப்படி வந்தீர்கள்?

பதில்: நான் கொஞ்ச காலம் மருத்துவமனையில் வேலை செய்தபோது, விளம்பர படங்களில் நடித்துக் கொண்டிருந்தேன். அதைப்பார்த்து டைரக்டர் விஜய் அலுவலகத்தில் இருந்து எனக்கு அழைப்பு வந்தது. முதலில் தயக்கமாக இருந்தது. பின்னர் டைரக்டர் விஜய்யின் கதையை கேட்டதும், ஒரு நம்பிக்கை வந்தது.

கேள்வி: முதன்முதலாக நடித்த படம் எது?

பதில்: முதன்முதலாக நடித்த படம், ‘சைவம்.’

கேள்வி: உங்களுக்கு சினிமாவில் நடிப்பது சவுகரியமாக இருக்கிறதா? டி.வி. தொடரில் நடிப்பது சவுகரியமாக இருக்கிறதா?

பதில்: சினிமா வெவ்வேறு கதைக்களங்களை கொண்டிருக்கும். டி.வி. தொடர்கள் வெகுஜன ரசிகர்களிடம் சுலபமாக கொண்டு போய் சேர்த்து விடும். இருப்பினும் சினிமாவில் நடிப்பதே எனக்கு பிடிக்கும்.

கேள்வி: உங்களுக்கு பிடித்த நடிகர் யார்?

பதில்: எனக்கு சூர்யா, மஞ்சுவாரியர் ஆகிய இரண்டு பேரையும் மிகவும் பிடிக்கும்.

கேள்வி: நடிகை ஆனதற்காக எப்போதாவது வருத்தப்பட்டு இருக்கிறீர்களா?

பதில்: நிச்சயமாக இல்லை. நடிகையாக இருப்பது எனக்கு பிடித்து இருக்கிறது.

Next Story