சினிமா செய்திகள்

66-வது படத்தில் விஜய் சம்பளம் ரூ.100 கோடி? + "||" + Vijay's salary of Rs 100 crore in 66th film?

66-வது படத்தில் விஜய் சம்பளம் ரூ.100 கோடி?

66-வது படத்தில் விஜய் சம்பளம் ரூ.100 கோடி?
விஜய் இப்போது நெல்சன் டைரக்டு செய்யும் புதிய படத்தில் நடித்து வருகிறார். படத்துக்கு `பீஸ்ட்' என்று பெயர் சூட்டப்பட்டுள் ளது. இது அவர் நடிக்கும் 65-வது படம்.
விஜய் இப்போது நெல்சன் டைரக்டு செய்யும் புதிய படத்தில் நடித்து வருகிறார். படத்துக்கு `பீஸ்ட்' என்று பெயர் சூட்டப்பட்டுள் ளது. இது அவர் நடிக்கும் 65-வது படம். கொரோனா மற்றும் ஊரடங்கு காரணமாக நிறுத்தி வைக்கப்பட்ட படங்களில், இதுவும் ஒன்று.


இந்த படத்தை தீபாவளி விருந்தாக திரைக்கு கொண்டுவர திட்டமிட்டு இருந்தார்கள்.

கொரோனா ஊரடங்கினால் திட்டமிட்டபடி படத்தை தீபாவளிக்கு கொண்டுவர முடியுமா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

இந்த நிலையில், விஜய்யின் 66-வது படம் பற்றிய ஒரு தகவல் கோடம்பாக்கம் முழுவதும் பரவியிருக்கிறது. அந்த படத்தை பிரபல தெலுங்கு பட அதிபர் தில் ராஜு தயாரிப்பார் என்றும், தெலுங்கு டைரக்டர் வம்சி இயக்கத்தில் விஜய் நடிப்பார் என்றும் பேசப்பட்டன.

இதற்கிடையில், விஜய்யின் 66-வது படத்தை பிரபல பட நிறுவனமான சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்க இருக்கிறது என்றும், இதற்கான முதல்கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது என்றும் இன்னொரு தகவல் பரவியிருக்கிறது.

விஜய் ‘கால்ஷீட்’ யாருக்கு? என்பது இன்னும் ஒரு வாரத்தில் தெரிந்துவிடும். இந்த படத்தில் இருந்து விஜய் சம்பளம் ரூ.100 கோடியாக உயர்ந்திருப்பதாக பேசப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

1. நயன்தாரா சம்பளம் ரூ.10 கோடி
நயன்தாரா சம்பளம் ரூ.10 கோடி.
2. டுவிட்டரில் விஜய் ரசிகர்கள் பீஸ்ட் அப்டேட் கேட்டு புதிய ஹேஷ்டேக் டிரெண்ட்
பீஸ்ட் திரைப்படத்தின் அப்டேட் கேட்டு டுவிட்டரில் "அப்டேட் கொடுங்க நெல்சன்" என்ற ஹேஷ்டேக்கை டிரெண்ட் செய்து வருகின்றனர் விஜய் ரசிகர்கள்.
3. விஜய் மக்கள் இயக்க கூட்டங்களில் எனது பெயரை பயன்படுத்த தடை விதிக்க வேண்டும்
விஜய் மக்கள் இயக்க கட்சி கூட்டங்களில் எனது பெயரை பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் என்று நடிகர் விஜய் தொடர்ந்த வழக்கு வருகிற 27-ந் தேதி மீண்டும் விசாரணைக்கு வருகிறது.
4. விஜய்யின் சாதி சான்றிதழ் ரகசியம்
சாதி வெறிக்கு எதிராக உருவாகியுள்ள புதிய படம், ‘சாயம்.’ இந்தப் படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில், சிறப்பு விருந்தினராக டைரக்டர் எஸ்.ஏ.சந்திரசேகரன் கலந்துகொண்டு பேசினார். அவர் பேசியதாவது:-
5. வடிவேல் சம்பளம் ரூ.10 கோடி?
இம்சை அரசன் 24-ம் புலிகேசி பட சர்ச்சையால் பல வருடங்களாக சினிமாவில் இருந்து ஒதுக்கி வைக்கப்பட்ட நகைச்சுவை நடிகர் வடிவேல் இப்போது தடை நீங்கியதால் மீண்டும் நடிக்க வருகிறார்.