சினிமா செய்திகள்

மதுபானத்துக்கு ஆன்லைனில் பணம் வாங்கி நடிகை ஷபனா ஆஸ்மியிடம் மோசடி + "||" + Actress Shabana Azmi cheated by buying money online for liquor

மதுபானத்துக்கு ஆன்லைனில் பணம் வாங்கி நடிகை ஷபனா ஆஸ்மியிடம் மோசடி

மதுபானத்துக்கு ஆன்லைனில் பணம் வாங்கி நடிகை ஷபனா ஆஸ்மியிடம் மோசடி
மதுபானத்துக்கு ஆன்லைனில் பணம் வாங்கி நடிகை ஷபனா ஆஸ்மியிடம் மோசடி.
இந்தி திரையுலகின் மூத்த நடிகையான ஷபனா ஆஸ்மி 1970 மற்றும் 80-களில் 120-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து முன்னணி கதாநாயகியாக வலம் வந்தார். தற்போது அவருக்கு 70 வயது ஆகிறது.

ஷபனா ஆஸ்மி ஆன்லைனில் மதுபானம் வாங்க பணம் கொடுத்து ஏமாந்ததாக பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளார். இதுகுறித்து ஷபனா ஆஸ்மி டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், “நான் செயலி மூலம் ஆன் லைனில் மதுபானம் வாங்க ஆர்டர் கொடுத்தேன். அதற்கான பணத்தையும் முன்கூட்டியே செலுத்தி விட்டேன். ஆனால் அவர்கள் எனக்கு அதனை டெலிவரி செய்யவில்லை. நான் போன் செய்தும் எனது அழைப்புகளை எடுக்கவில்லை. என்னிடம் மோசடி செய்துவிட்டனர். எனவே எச்சரிக்கையாக இருங்கள்'' என்று கூறியுள்ளார். மேலும் பணம் அனுப்பிய வங்கி கணக்கையும் வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார். இதுகுறித்து போலீசிலும் புகார் அளித்துள்ளார். ஏற்கனவே அக்‌ஷய்கன்னா, நர்கிஸ் பக்ரி உள்ளிட்ட பல இந்தி பிரபலங்கள் ஆன்லைன் மோசடியில் சிக்கி ஏமாந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.தொடர்புடைய செய்திகள்

1. வெளியூர்களுக்கு மோட்டார் சைக்கிள்களை அனுப்புவதாக கூறி நூதன மோசடி பெண் உள்பட 2 பேர் கைது
சென்னையில் மோட்டார் சைக்கிள்களை வெளியூர்களுக்கு சரக்கு வாகனம் மூலம் அனுப்புவதாக கூறி மோசடியில் ஈடுபட்ட பெண் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
2. ஆன்லைன் சூதாட்டத்தில் ரூ.87 லட்சத்தை இழந்தவர் கண்ணீர் புகார் மோசடி நபர் அதிரடி கைது
சென்னையில் ஆன்லைன் சூதாட்டத்தில் ரூ.87 லட்சத்தை இழந்த நபர் கண்ணீருடன் கொடுத்த புகார் அடிப்படையில் மோசடி நபர் கைது செய்யப்பட்டார்.
3. வாடிக்கையாளர்களின் ஆவணங்களை திருடி வீட்டு உபயோக பொருட்கள் வாங்கி மோசடி: 2 பேர் கைது
சென்னையில் உள்ள எலக்ட்ரானிக் பொருட்கள் விற்பனை செய்யும் ஷோரூம்களில் பொருட்களை தவணை முறையில் வாங்க, வாடிக்கையாளர்களுக்கு தனியார் பைனான்ஸ் நிறுவனம் கடனுதவி கொடுத்து வருகிறது.
4. உறவினர் பண மோசடி செய்ததால் ஆத்திரம்: வியாபாரி மீது தாக்குதல் 4 பேர் கைது
உறவினர் பண மோசடி செய்ததால் ஆத்திரம்: வியாபாரி மீது தாக்குதல் 4 பேர் கைது.
5. பில்லி-சூனியம் எடுப்பதாக பெண்களிடம் ரூ. 80 லட்சம் மோசடி
பில்லி-சூனியம் எடுப்பதாக கூறி 3 பெண்களிடம் ரூ.80 லட்சம் மோசடி செய்த 2 பெண்கள் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர். மோசடி செய்த பணத்தில் சொகுசு பங்களா கட்டி வசித்தது விசாரணையில் தெரியவந்தது.