இந்தியில் ஷாருக்கான் ஜோடியாக நயன்தாரா?


இந்தியில் ஷாருக்கான் ஜோடியாக நயன்தாரா?
x
தினத்தந்தி 26 Jun 2021 1:10 AM GMT (Updated: 2021-06-26T06:40:13+05:30)

இந்தியில் ஷாருக்கான் ஜோடியாக நயன்தாரா?

தென்னிந்திய கதாநாயகிகள் பலர் இந்தி படங்களில் நடிக்கின்றனர். திரிஷா காட்டா மிட்டா இந்தி படத்தில் அக்‌ஷய்குமார் ஜோடியாக நடித்துள்ளார். டாப்சி இந்தியில் அதிக படங்களில் நடித்து முன்னணி நடிகையாக இருக்கிறார். தமன்னா, ராஷிகன்னா ஆகியோரும் இந்தி படங்களில் நடித்துள்ளனர். ராஷ்மிகா தற்போது இந்தி படமொன்றில் அறிமுகமாகி உள்ளார். சமந்தா பேமிலிமேன்-2 வெப் தொடர் மூலம் இந்திக்கு போய் உள்ளார். இந்த நிலையில் நயன்தாராவையும் இந்தி படமொன்றில் நடிக்க வைக்க பேச்சுவார்த்தைகள் நடப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழில் ராஜா ராணி, தெறி, மெர்சல், பிகில் படங்களை இயக்கிய அட்லி இந்தியில் ஷாருக்கான் நடிக்கும் புதிய படத்தை டைரக்டு செய்ய உள்ளார். இந்த படத்தில் ஷாருக்கான் ஜோடியாக நடிக்க நயன்தாராவிடம் பேசி வருவதாக கூறப்படுகிறது.

ஏற்கனவே இந்தி படங்களில் நடிக்க நயன்தாராவுக்கு வாய்ப்புகள் வந்தும் அவர் ஏற்கவில்லை. அட்லியின் ராஜா ராணி, பிகில் படங்களில் நயன்தாரா நடித்துள்ளதாலும், ஷாருக்கான் இந்தியில் முன்னணி கதாநாயகன் என்பதாலும் இந்த படத்தில் நடிக்க நயன்தாரா சம்மதிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நயன்தாரா கைவசம் தற்போது நெற்றிக்கண், அண்ணாத்த, காத்துவாக்குல ரெண்டு காதல் ஆகிய படங்கள் உள்ளன. நெற்றிக்கண் படத்தை ஓ.டி.டி.யில் வெளியிட பேசி வருகிறார்கள்.


Next Story