சினிமா செய்திகள்

நகை தொழிலில் இறங்கும் சமந்தா + "||" + Samantha enters the jewelry business

நகை தொழிலில் இறங்கும் சமந்தா

நகை தொழிலில் இறங்கும் சமந்தா
நகை தொழிலில் இறங்கும் சமந்தா.
நடிகைகள் பலர் சினிமாவோடு ரியல் எஸ்டேட், ஜவுளி கடை, பேஷன் ஆடைகள, நகை வியாபாரம், ஓட்டல் உள்ளிட்ட தொழில்களிலும் கவனம் செலுத்தி வருகிறார்கள். தமன்னா நகைகளை வடிவமைப்பு செய்து வியாபாரம் செய்யும் தொழிலில் ஈடுபட்டுள்ளார். இலியானா மும்பை, ஐதராபாத்தில் ஜவுளிகடை நடத்துகிறார்.


நயன்தாரா, திரிஷா போன்றோர் ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்துள்ளனர். காஜல் அகர்வால் கணவருடன் இணைந்து தொழில் நிறுவனங்கள் மற்றும் வீடுகள் வணிக வளாகங்களில் உள் அலங்காரம் செய்யும் தொழிலில் ஈடுபட உள்ளார்.

இந்த நிலையில் நடிகை சமந்தா நகை வியாபாரத்தில் இறங்க முடிவு செய்துள்ளார். சென்னை, ஐதராபாத், மும்பை உள்ளிட்ட நகரங்களில் இந்த வியாபாரத்தை நடத்த திட்டமிட்டு உள்ளதாக கூறப்படுகிறது. சமந்தா நடித்த பேமிலிமேன் 2 வெப் தொடர் சமீபத்தில் வெளியானது. தற்போது விஜய்சேதுபதியுடன் இணைந்து காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தில் நடித்து வருகிறார்.

தொடர்புடைய செய்திகள்

1. வில்லியாக நடிக்கும் சமந்தா
நடிகை சமந்தா தமிழ், தெலுங்கு, இந்தியில் தயாராகும் ‘த பேமிலிமேன் 2’ வெப் தொடரில் நடித்து வருகிறார். இதில் அவர் வில்லியாக நடிப்பதாக கூறப்படுகிறது.
2. புராண கதையில் நடிக்க சம்பளத்தை குறைத்த நடிகை சமந்தா
சகுந்தலை புராண கதை சினிமா படமாக தயாராகிறது. இந்த படத்தில் சகுந்தலையாக சமந்தா நடிக்கிறார்.