தேசிய விருதை குறிவைத்து வெற்றிமாறன்-ராகவா லாரன்ஸ் கூட்டணி


தேசிய விருதை குறிவைத்து வெற்றிமாறன்-ராகவா லாரன்ஸ் கூட்டணி
x
தினத்தந்தி 27 Jun 2021 1:02 AM GMT (Updated: 2021-06-27T06:32:02+05:30)

வெற்றிமாறன் இயக்கத்தில் ‘பொல்லாதவன்’, ‘ஆடுகளம்’ ஆகிய படங்களை தயாரித்தவர் எஸ்.கதிரேசன். இவர் 6 தேசிய விருதுகளை பெற்றவர்.

‘உதயம்’, ‘காக்கா முட்டை’, ‘விசாரணை’, ‘வடசென்னை’ ஆகிய படங்களுக்காக பல விருதுகளை பெற்ற வெற்றிமாறனும் இணைந்து, ‘அதிகாரம்’ என்ற படத்தை தயாரிக்கிறார்கள்.

இந்த படத்தின் கதை, திரைக்கதை, வசனத்தை வெற்றிமாறன் எழுதியிருக்கிறார். இவரும், கதிரேசனும் 10 வருடங்களுக்கு பின் மீண்டும் இணைந்து பணிபுரிகிறார்கள். கதாநாயகனாக ராகவா லாரன்ஸ் நடிக்கிறார். துரை செந்தில்குமார் டைரக்டு செய்கிறார். இவர் எதிர்நீச்சல், காக்கி சட்டை, கொடி, பட்டாசு ஆகிய படங்களை இயக்கியவர்.

தேசிய விருதை குறிவைத்து இந்த படத்தின் கதை அமைக்கப்பட்டுள்ளது. படப்பிடிப்பு சென்னையிலும், மலேசியாவிலும் நடைபெற இருக்கிறது.

Next Story