இந்தி ராட்சசனில் அக்‌ஷய்குமார்


இந்தி ராட்சசனில் அக்‌ஷய்குமார்
x
தினத்தந்தி 27 Jun 2021 9:26 PM GMT (Updated: 2021-06-28T02:56:46+05:30)

விஷ்ணு விஷால் நடித்து 2018-ல் திரைக்கு வந்த ராட்சசன் படத்துக்கு விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் வரவேற்பு கிடைத்தது.

விஷ்ணு விஷால் திரையுலக வாழ்க்கையில் முக்கிய படமாகவும் அமைந்தது. சைக்கோ திரில்லர் படமாக தயாராகி இருந்தது. நாயகியாக அமலாபால் நடித்து இருந்தார். ராம்குமார் இயக்கி இருந்தார். இந்த படத்தை மற்ற மொழிகளில் 
ரீமேக் செய்ய ஆர்வம் காட்டினர். ராட்சசன் படத்தின் தெலுங்கு ரீமேக்கில் பெல்லம்கொண்டா சீனிவாஸ் நடிக்கிறார். இந்தியிலும் ராட்சசன் படத்தை ரீமேக் செய்கின்றனர். இந்தியில் விஷ்ணு விஷால் கதாபாத்திரத்தில் நடிப்பது யார் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. ஆயுஷ்மான் குரானா பெயர் அடிபட்டது. இந்த நிலையில் அக்‌ஷய்குமார் ராட்சசன் இந்தி ரீமேக்கில் நடிக்க உள்ளதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது. அவரே படத்தை தயாரிக்க இருப்பதாகவும் ரமேஷ் வர்மா இயக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

Next Story