கிரிக்கெட் வீரர் கதையில் சூர்யா?


கிரிக்கெட் வீரர் கதையில் சூர்யா?
x
தினத்தந்தி 27 Jun 2021 11:32 PM GMT (Updated: 2021-06-28T05:02:21+05:30)

கிரிக்கெட் வீரர்கள் தெண்டுல்கர், தோனி வாழ்க்கை கதைகள் சினிமா படங்களாக வந்துள்ளன. இந்த நிலையில் கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா வாழ்க்கையையும் படமாக்கும் முயற்சி நடப்பதாக தகவல் பரவி வருகிறது.

ஐ.பி.எல். போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சார்பில் சுரேஷ் ரெய்னா விளையாடி வருகிறார். தனது வாழ்க்கை கதை படத்தில் சூர்யா நடிக்க வேண்டும் என்று அவர் விருப்பம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து சுரேஷ் ரெய்னா அளித்துள்ள பேட்டியில், “சூர்யா எனக்கு பிடித்தமான நடிகர். எனது வாழ்க்கை சினிமா படமாக எடுக்கப்பட்டால் அதில் சூர்யாதான் நடிக்க வேண்டும். அவரால்தான் எனது கதாபாத்திரத்தை சிறப்பாக செய்ய முடியும்’’ என்று கூறி உள்ளார். 

சமீபத்தில் சூர்யா நடித்து ஓ.டி.டி தளத்தில் வெளியான சூரரை போற்று படமும் வாழ்க்கை வரலாறு கதை. அதில் விமான நிறுவனம் நடத்திய ஜி.ஆர். கோபிநாத் கதாபாத்திரத்தில் சூர்யா நடித்து இருந்தார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. ஆஸ்கார் போட்டிக்கும் சென்று வந்தது. சூர்யா தற்போது பாண்டிராஜ் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தை மையமாக வைத்து இந்த படம் தயாராவதாக கூறப்படுகிறது.

Next Story