சினிமா செய்திகள்

“மருத்துவ பரிசோதனை நல்லபடியாக நடந்தது'': ரஜினிகாந்த் தகவல் + "||" + "Medical examination went well": Rajinikanth informed

“மருத்துவ பரிசோதனை நல்லபடியாக நடந்தது'': ரஜினிகாந்த் தகவல்

“மருத்துவ பரிசோதனை நல்லபடியாக நடந்தது'': ரஜினிகாந்த் தகவல்
நடிகர் ரஜினிகாந்த் ஏற்கனவே சிறுநீரக பாதிப்புக்கான சிகிச்சை செய்து கொண்டதால் அடிக்கடி அமெரிக்கா சென்று மருத்துவ பரிசோதனை செய்து வந்தார்.
சமீபத்தில் அண்ணாத்த படப்பிடிப்பை முடித்த நிலையில் கடந்த 19-ந்தேதி மீண்டும் அமெரிக்கா சென்று அங்குள்ள ஆஸ்பத்திரியில் மருத்துவ பரிசோதனைகள் செய்து கொண்டார். மருத்துவ குழுவினர் ரஜினிக்கு பல்வேறு உடல் பரிசோதனைகள் செய்தனர். பரிசோதனை அறிக்கை ரஜினிகாந்திடம் வழங்கப்பட்டது. இந்த நிலையில் அமெரிக்க ஆஸ்பத்திரியில் மருத்துவ பரிசோதனை நல்லபடியாக நடந்ததாக ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். இதுகுறித்து கவிஞர் வைரமுத்து டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், ''அமெரிக்காவில் இருந்து ரஜினி அழைத்தார். மருத்துவ சோதனை நல்ல வண்ணம் நடந்தது என்றார். மகிழ்ந்தேன். அவர் குரலில் ஆரோக்கியம். நம்பிக்கை இரண்டும் இழையோட கண்டேன். அவரன்பர்களின் மகிழ்ச்சிக்காகவே இதை பதிவிட்டு பகிர்கிறேன்'' என்று கூறியுள்ளார். நடிகர் தனுஷ் தி கிரே மேன் ஹாலிவுட் படத்தில் நடிக்க அமெரிக்காவில் குடும்பத்தினருடன் முகாமிட்டு உள்ளார். அவருடன் ரஜினிகாந்த் தங்கி இருக்கிறார். 2 வாரங்களுக்கு பிறகு அமெரிக்காவில் இருந்து ரஜினிகாந்த் சென்னை திரும்புகிறார்.

தொடர்புடைய செய்திகள்

1. மருத்துவ பரிசோதனை
ஜிகா வைரசை தடுப்பதற்காக தமிழககேரள எல்லையான ஒன்பதாறு சோதனைச்சாவடியில் சுகாதாரத்துறையினர் பரிசோதனை மேற்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
2. ‘அண்ணாத்த’ படத்தை அடுத்து தனுஷ் இயக்கத்தில், ரஜினிகாந்த்
ரஜினிகாந்த் நடித்து வரும் ‘அண்ணாத்த’ படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடந்தபோது, அவருடைய உடல்நிலை திடீரென்று பாதிக்கப்பட்டது.
3. தமிழக சட்ட சபை தேர்தல்: நடிகர்கள் ரஜினிகாந்த், அஜித் உள்ளிட்டோர் வாக்களித்தனர்
தமிழக சட்ட சபை தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.
4. ரஜினிகாந்திற்கு தாதா சாகேப் பால்கே விருது குவியும் வாழ்த்துக்கள்
ரஜினிகாந்திற்கு தாதா சாகேப் பால்கே விருது குவியும் வாழ்த்துக்கள்; அரசியல் தலைவர்கள், திரையுலகினர் வாழ்த்து தெரிவித்து உள்ளனர்
5. மருத்துவ பரிசோதனை
தேர்தல் பணியில் இருந்து விலக்கு கோரியவர்களுக்கு கலெக்டர் அலுவலகத்தில் மருத்துவ பரிசோதனை நடைபெற்றது.