சினிமா செய்திகள்

நடிகரின் துரோகம் காதல் தோல்வியில் நடிகை புது முடிவு + "||" + The actress 'betrayal is the actress' new end in love failure

நடிகரின் துரோகம் காதல் தோல்வியில் நடிகை புது முடிவு

நடிகரின் துரோகம் காதல் தோல்வியில் நடிகை புது முடிவு
நடிகரின் துரோகத்தால் காதல் தோல்வியில் பிரபல இந்தி நடிகை மினிஷா லம்பா புது முடிவு செய்துள்ளார்.
பிரபல இந்தி நடிகை மினிஷா லம்பா. இவர் 2005-ல் யஹான் படம் மூலம் அறிமுகமாகி கார்பரேட், ராக்கி, கிட்நாப், அனாமிகா, ஜோக்கர் உள்பட பல படங்களில் நடித்து இருக்கிறார். மினிஷா லம்பா ஏற்கனவே அளித்த பேட்டியொன்றில், “நான் ஒரு நடிகரை காதலித்தேன். ஆனால் அவர் இன்னொரு பெண்ணுடனும் தொடர்பு வைத்து இருந்தார். அதை பார்த்து அதிர்ச்சியானேன். அந்த நடிகர் எனக்கு துரோகம் செய்து விட்டார்” என்றார். 

பின்னர் தொழில் அதிபர் ரயனை மணந்து விவாகரத்து செய்து விட்டார். தற்போது அவருக்கு மீண்டும் காதல் மலர்ந்துள்ளது. நடிகரை காதலித்து துரோகத்தை சந்தித்ததால் திரையுலகினரை சேர்ந்த யாரையும் இனிமேல் காதலிப்பது இல்லை என்று முடிவு செய்துள்ளார். இதுகுறித்து மினிஷா லம்பா கூறும்போது, “எனக்கு மீண்டும் காதல் வந்து இருக்கிறது. 

எனது காதலர் நடிகர் இல்லை. நடிகர்கள் மட்டுமன்றி சினிமாவை சேர்ந்த யாரையும் காதலிக்க மாட்டேன். அந்த முடிவில் கவனமாக இருக்கிறேன். அதற்கு காரணம் இருக்கிறது. நடிகர்களை காதலிப்பவர்களும் இருக்கிறார்கள். நான் வெளிப்படையாக பேசினால் அவர்களுக்கு மன வருத்தம் ஏற்படும். எனவே அதை பற்றி பேச விரும்பவில்லை. நடிகர்களை காதலிக்க கூடாது என்பது எனது சொந்த முடிவு” என்றார்.