ரசிகர்களை கண்டித்த ராஷ்மிகா


ரசிகர்களை கண்டித்த ராஷ்மிகா
x
தினத்தந்தி 29 Jun 2021 3:55 AM GMT (Updated: 2021-06-29T09:25:26+05:30)

நடிகை ராஷ்மிகா ரசிகர்களை கண்டித்து தனது டுவிட்டரில் கருத்து வெளியிட்டுள்ளார்.

ரசிகர்கள் நீண்ட தூரம் பயணம் செய்து நடிகை ராஷ்மிகாவை காண அவரது வீட்டுக்கு செல்கிறார்கள். ஆனால் அவரை பார்க்க முடியவில்லை. ஒரு ரசிகர் 900 கிலோ மீட்டர் பயணம் செய்து வந்தும் ராஷ்மிகாவை சந்திக்க முடியாமல் ஏமாற்றத்தோடு திரும்பினார். ரசிகர்களை ராஷ்மிகா சந்திக்காதது விமர்சனங்களை கிளப்பியது. 

இதையடுத்து ரசிகர்களை கண்டித்து ராஷ்மிகா டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், “என்னை பார்ப்பதற்காக உங்களில் ஒருவர் நீண்ட தூரம் பயணம் செய்வதும் என்னை காண்பதற்காக எனது வீட்டுக்கு ரசிகர்கள் வந்து போவதும் எனது கவனத்துக்கு வந்துள்ளது. தயவு செய்து இதுபோல் யாரும் செய்யாதீர்கள். இவ்வளவு தூரம் பயணம் செய்யும் உங்களை என்னால் பார்க்க முடியவில்லை என்பது எனக்கு வருத்தமாக உள்ளது. 

உங்களை ஒரு நாள் கண்டிப்பாக நான் சந்திப்பேன். இப்போது உங்கள் அன்பை மட்டும் வெளிப்படுத்துங்கள். நான் சந்தோஷப்படுவேன்” என்று கூறியுள்ளார். ராஷ்மிகா இந்தியில் மிஷன் மஞ்சு படத்தில் அறிமுகமாகி முன்னணி நடிகையாக உயர்ந்துள்ளார். தமிழில் கார்த்தி ஜோடியாக சுல்தான் படத்தில் நடித்துள்ளார்.

Next Story