பாலியல் புகாரில் சிக்கிய இளம் நடிகர் விளக்கம்


பாலியல் புகாரில் சிக்கிய இளம் நடிகர் விளக்கம்
x
தினத்தந்தி 29 Jun 2021 11:01 PM GMT (Updated: 2021-06-30T04:31:22+05:30)

பாலியல் புகாரில் சிக்கிய இந்தி இளம் நடிகர் பியர்ல் பூரி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளார்.

இந்தி இளம் நடிகர் பியர்ல் பூரி சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக எழுந்த புகாரில் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார். அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலைத்தளத்தில் பலரும் வற்புறுத்தினர். ஆனால் நடிகைகள் யாஷிகா ஆனந்த், திவ்யா கோஸ்லா, அனிதா ஹசந்தனி, தயாரிப்பாளர் ஏக்தா கபூர் ஆகியோர் பியர்ல் பூரி குற்றம் செய்து இருக்க மாட்டார் என்று சொல்லி கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். 

தற்போது பியர்ல் பூரி ஜாமீனில் வந்துள்ளார். இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், “எனது பாட்டி சில மாதங்களுக்கு முன்பு மரணம் அடைந்தார். அவர் இறந்த 17-வது நாளில் எனது தந்தை இறந்து போனார். பின்னர் எனது அம்மாவுக்கு புற்றுநோய் பாதிப்பு இருப்பது தெரியவந்தது. இந்த நிலையில் என்மீது பாலியல் புகார் கூறப்பட்டு உள்ளது. 

ஒரு இரவிலேயே நான் குற்றவாளியாக சித்தரிக்கப்பட்டேன். இந்த நேரத்தில் எனக்கு ஆதரவாக இருக்கும் நண்பர்களுக்கு நன்றி. உண்மை வெல்லும் என்று நம்புகிறேன். நீதி துறை மீதும் நம்பிக்கை இருக்கிறது. கடவுள் இருக்கிறார்” என்று கூறியுள்ளார்.

Next Story