வாழ விடாத உலகம்; நடிகை கங்கனா வருத்தம்


வாழ விடாத உலகம்; நடிகை கங்கனா வருத்தம்
x
தினத்தந்தி 30 Jun 2021 12:20 AM GMT (Updated: 2021-06-30T05:50:49+05:30)

தோல்வி அடைந்தவர்களை உலகம் வாழவும் விடாது என நடிகை கங்கனா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வருத்தத்துடன் பதிவிட்டுள்ளார்.

நடிகை கங்கனா ரணாவத் தலைவி படத்தில் நடித்து முடித்துள்ளார். மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா வாழ்க்கை கதையாக இந்த படம் தயாராகி உள்ளது. அடுத்து இந்திரா காந்தி வாழ்க்கை கதையில் நடிக்க உள்ளார். கங்கனா ரணாவத் சமூக வலைதளத்தில் அடிக்கடி சர்ச்சை கருத்துக்களையும் வெளியிட்டு வருகிறார். இதனால் அவர் மீது வழக்குகள் தொடரப்பட்டு உள்ளன. டுவிட்டர் பக்கமும் முடக்கப்பட்டது. தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கங்கனா ரணாவத் வருத்தத்துடன் வெளியிட்டுள்ள பதிவில், “தோல்வி அடைந்தவர்களை மக்கள் விட்டு விடுவார்கள். அவர்களை கேவலமாகவும் நடத்துவார்கள். தோல்வி அடைந்தவர்களை உலகம் வாழவும் விடாது. கஷ்டப்பட்டு உழைத்து வாழ்க்கையில் வெற்றி பெற்றவர்களை பயமுறுத்துவார்கள். கீழே தள்ளி விடவும் முயற்சிப்பார்கள். தனிமைப்படுத்தவும் செய்வார்கள். வெற்றி பெற்றவர்கள் தனிமையில்தான் இருக்க வேண்டும். அதனால்தான் வாழ்க்கையில் ஜெயித்தவர்கள் தனித்து இருப்பார்கள் என்று கூறுகின்றனர்” என்றார்.

Next Story