மூத்த பாலிவுட் நடிகர் நசுருதீன் ஷா மருத்துவமனையில் அனுமதி


மூத்த பாலிவுட் நடிகர் நசுருதீன் ஷா மருத்துவமனையில் அனுமதி
x
தினத்தந்தி 30 Jun 2021 12:34 PM GMT (Updated: 2021-06-30T18:04:11+05:30)

நிமோனியா நோயால் பாதிக்கப்பட்டு மூத்த பாலிவுட் நடிகர் நசுருதீன் ஷா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

மும்பை

மூத்த நடிகர் நசுருதீன் ஷா, நிமோனியா நோயால் பாதிக்கப்பட்டு நேற்று மும்பையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அவரது மனைவியும் நடிகையுமான ரத்னா பதக் ஷா தெரிவித்துள்ளார்.

நசுருதீன் ஷா தற்போது  இந்துஜா மருத்துவமனையில்  சிகிச்சை பெற்று வருகிறார்.

1967 முதல் திரைப்படங்களில் நடித்து வருகிறார் நசுருதீன் ஷா. 1980களில் புகழ்பெற்ற நடிகராக விளங்கினார். தொலைக்காட்சி, இணையத்தொடர்களிலும் நடித்துள்ளார். சிறந்த நடிப்புக்காக மூன்று முறை தேசிய விருதுகளைப் பெற்றுள்ளார். 1987-ல் பத்மஸ்ரீ 2003-ல் பத்மபூஷன் விருதுகளைப் பெற்றுள்ளார்.

Next Story